ஹரியானாவின் ஆன்டிஜென் சோதனையில் 4.6 சதவீதத்தினருக்கு தொற்று பாதிப்பு

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

சண்டிகர் : ஹரியானாவின் 16 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் 4.6 சதவீதத்தினருக்கு தொற்று பாதிப்பு இருந்ததாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹரியானாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த, முதலில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். ஹரியானாவின் 16 மாவட்டங்களில் ஜூலை 19 வரை சுமார் 62,000 க்கும் மேற்பட்ட நபர்கள் தொற்றை கண்டறிவதற்கான விரைவு ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொண்டனர்.

இவற்றில் 4.6 சதவீதம் பேர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா அறிகுறியற்ற நபர்களை கண்டறிய ஆன்டிஜென் சோதனை உதவியாக இருந்தன. இது அனைவருக்கும் அணுககூடியதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news



ஹரியானா முழுவதும் 62,141 பேரை பரிசோதிக்க ஆன்டிஜென் கருவிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மொத்த பரிசோதனையில் குருகிராமின் பங்கு கிட்டத்தட்ட 40.6 சதவீதம் என ஜூலை 19 வரையான டேட்டா கூறுகிறது. கண்டறியப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளில் அதன் பங்கு 29.3 சதவீதமாகும். ஜூலை 19 வரை குருகிராமில் 25,249 பேர் அதிகபட்ச ஆன்டிஜென் சோதனையை நடத்தினர். இவற்றில் 840 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மாவட்டத்தின் ஆன்டிஜென் சோதனை பாசிட்டிவ் விகிதம் 3.3 சதவீதமாகும். ஆன்டிஜென் சோதனைகளுடன் ஒப்பிடும்போது, ​​ஆர்டி-பி.சி.ஆர் (RT-PCR) நேர்மறை விகிதம் 8.1% வரை அதிகமாக உள்ளது.


latest tamil news



ஜூன் 24 - ஜூலை 19 வரை 27,959 பேருக்கு RT-PCR சோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றில் 2263 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஆன்டிஜென் சோதனை ஜூன் 24 முதல் தொடங்கியது. குருகிராமுடன் ஒப்பிடுகையில் பரிதாபாத் மாவட்டம் (13,042) ஆக இரண்டாவது அதிகபட்ச சோதனைகளை செய்துள்ளது. இவற்றில் 1,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது மாவட்டத்தின் ஆன்டிஜென் பாதிப்பு விகிதத்தை 8.9% ஆகக் கொண்டுள்ளது.

சோனேபாட் மாவட்டத்தில் 7,473 பேருக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் 334 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ரேவாரி மாவட்டத்தில் 1,244 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 118 பேர் பாதிக்கப்பட்டனர் (9.5 சதவீதம்) மற்றும் ரோஹ்தக் மாவட்டத்தில் 2,758 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 32 பேர் பாதிக்கப்பட்டனர். இங்கு பாதிப்பு விகிதம் 1.2 சதவீதமாக (குறைந்த பாதிப்பு விகிதம்) உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X