கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோதமாக தங்கி மத பிரசாரம் : மூவருக்கு, அபராதம்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சட்ட விரோதமாக தங்கி மத பிரசாரம் : மூவருக்கு, அபராதம்

சென்னை : சுற்றுலா விசாவில், சென்னைக்கு வந்து, பெரியமேடு மசூதியில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்ட, வங்க தேசத்தைச் சேர்ந்த மூவருக்கு, எழும்பூர் நீதிமன்றம், தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

டில்லியில், மார்ச் முதல் வாரத்தில், 'தப்லிக் ஜமாத்' என்ற, முஸ்லிம் மத மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற, வங்க தேசத்தைச் சேர்ந்த மூவர், மார்ச் 20ல், சென்னைக்கு வந்து, சட்ட விரோதமாக, பெரியமேடு மசூதியில் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், ஏப்.,4ல், மசூதியில் பதுங்கி இருந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த, முகமது அமீர் ஹுசைன், 50; முகமது சலீம் ஹுசைன், 30; அப்துல் ஹுசைன், 57 என, மூன்று பேரை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பின், மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள், ஜாமின் பெற்று, போலீஸ் பாதுகாப்புடன், சென்னை புளியந்தோப்பில் உள்ள, ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் தொடர்பான வழக்கு நேற்று, சென்னை, எழும்பூர் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் மூவரையும் ஆஜர்படுத்தினர். மூவரும், சுற்றுலா விசாவில் கோல்கட்டாவுக்கு வந்து, மும்பை வழியாக, ஆந்திர மாநிலம், சித்துாருக்கு சென்றனர். பின், அங்கிருந்து காரில், சென்னைக்கு சென்று, பெரியமேடு மசூதியில், மத பிரசாரத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து மூவருக்கும், மாஜிஸ்திரேட், தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மூவரும், மீண்டும் ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.K. GANESAN - chennai ,இந்தியா
30-ஜூலை-202012:41:36 IST Report Abuse
P.K. GANESAN மல்லிக ராஜா மற்றும் ரபி அவர்களே| உங்கள் மதத்தவர்களை நீங்களே எதிர்க்கும் போது, நாம் அவர்களை இங்கு பாக்கு வெற்றிலை வைத்து அழைத்தோமா? நம் தாய்த் திருநாடு உங்களை போன்ற வந்தேறிகளின் கூடாரமா? இழி தொழில் செய்து கேவலமாகப் பிழைக்கும் உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையா?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
26-ஜூலை-202012:46:51 IST Report Abuse
Rafi மத பிரசங்கம் எந்த மாற்று மதத்தவர்களுக்கு செய்தார்கள் என்று விளக்கம் இல்லை. உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்தந்த நாடுகளில் உள்ள பள்ளி வாசல்களில் வணக்க வழிபாட்டிற்காக செல்வார்கள். தப்லிக்கிற்காக செல்பவர்கள் பள்ளிகளில் முன் அனுமதி பெற்று தான் தங்குவார்கள், எளிமையாக அதே நேரத்தில் யாருடைய உதவியையும் ஏற்கவும் மாட்டார்கள். தங்களுக்கான உணவுகளை தாங்களே சமைத்து கொள்வார்கள், அவர்கள் இஸ்லாமியர்களில் உள்ள மக்களை ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றவும் ஒழுக்கத்தோடு வாழ வலியுறுத்தவே போதிப்பார்கள். மாற்று மதத்தவர்களை அவர்கள் சந்தித்து போதிப்பதை விட இஸ்லாமியர்களில் உலக வாழ்க்கையில் அடிமைப்பட்டு, இறை வழிபாட்டின் கடமைகளை மறந்து இருப்பவர்களை மட்டுமே கண்ணியத்துடன் ஒழுக்கத்துடன் இருக்கவே அழைப்பு விடுவார்கள். இங்கு பல விஷயங்கள் மிகைப்படுத்தி விளம்பரமாக்கப் படுகின்றது. பள்ளியில் பதுங்குவதற்கு இடம் கிடையாது, திறந்த அமைதியான இடம், அங்கு வீண் உலக பேச்சுகளுக்கு இடம் கிடையாது.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26-ஜூலை-202022:24:36 IST Report Abuse
madhavan rajanmosques are not for police search. Let them do whatever they want but they should have mentioned it in the visa application. When they did not mention it, it means they are hiding something or doing something wrong. If they come for preaching in mosques why can't they show it in their visa application. If they show it visa will not be given. In that case they should definitely desist from doing what is not allowed for visa conditions....
Rate this:
Hari - chennai,இந்தியா
27-ஜூலை-202015:51:02 IST Report Abuse
Hariithellaam engalukku ethukku...
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
26-ஜூலை-202012:41:55 IST Report Abuse
Nallavan Nallavan ஆதித்தமிழனுக்கு மதம் கிடையாது என்று (பொய்) சத்தியம் செய்பவர்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள் ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X