புதுச்சேரி பட்ஜெட்: கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Puducherry, LG Kiran Bedi, kiran bedi, Puducherry budget, புதுச்சேரி பட்ஜெட்: கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்


புதுச்சேரி :புதுச்சேரி பட்ஜெட்டுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டசபையில் நாளை உரையாற்றவும் ஒப்புக் கொண்டுள்ளார்.புதுச்சேரி சட்டசபையில், முன் பட்ஜெட் மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை, துறைவாரியான நிதி ஒதுக்கீடு சமர்ப்பிப்பதற்கான ஒப்புதல் கோரும் உத்தேச திட்டம், நிதித் துறையிலிருந்து, 21ம் தேதி மாலை முதல்வர் வாயிலாக, கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

நாளை, 24ம் தேதி காலை, 9:30 மணிக்கு சட்டசபையில் கவர்னர் உரையாற்றுவதற்கான அழைப்பு கடிதம் முதல்வர், சபாநாயகர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்டது. சட்டசபையில் உரையாற்றுவதற்கான அழைப்பை கவர்னர் ஏற்றுக்கொண்டுஉள்ளார்.


latest tamil news




உள்துறை அமைச்சகம் வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில், சட்டசபையின் வருடாந்திர நிதி அறிக்கை மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை ஆகியவற்றுக்கான தன் பரிந்துரையை தெரிவித்துள்ளதோடு, நாளை உரையாற்றுவதாகவும் கவர்னர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
23-ஜூலை-202015:07:34 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சரக்கு அடிச்சா ரெண்டா தெரியிற ஊர்ல எல்லாம் அங்கே ரெண்டா இருக்கு சொல்லப்போனா ரெண்டு பட்டு கிடக்கு
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜூலை-202013:05:40 IST Report Abuse
தமிழ்வேல் நாலு வருஷமா இங்கே போர் நடக்குது. இதை சரி செய்ய மத்திய அரசிற்கு வழி தெரியவில்லையா?. இதன் காரணம் என்ன ?
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜூலை-202013:02:25 IST Report Abuse
தமிழ்வேல் பட்ஜெட் தயார் செய்வது ஒருவர். அதை ஒப்புதல் என்ற பெயரில் தனது பட்ஜெட் போல ஒப்பிப்பது இன்னொருவர். இது தேவைதானா ? இதில், பல நாட்கள் தாமதமானதுதான் மிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X