சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

2 கோடி பேர் பங்கேற்கும் கந்த சஷ்டி பாராயணம்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (72)
Share
Advertisement
கோவை : உலகம் முழுதும் இருந்து, இரண்டு கோடி ஹிந்துக்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி, இணையதளம் வாயிலாக, வரும், 26ல், சஷ்டி திதியன்று நடக்க உள்ளது.'வாழும் கலை' அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக, அன்றாடம்
KandaSastiKavasam, கந்தசஷ்டி_கவசம், பாராயணம், 2கோடி, பேர்,

கோவை : உலகம் முழுதும் இருந்து, இரண்டு கோடி ஹிந்துக்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி, இணையதளம் வாயிலாக, வரும், 26ல், சஷ்டி திதியன்று நடக்க உள்ளது.

'வாழும் கலை' அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக, அன்றாடம் பிரார்த்தனைகளில், பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குணமடையவும் கந்த சஷ்டி கவசம் உதவி செய்கிறது.


latest tamil news


இதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மக்கள் நோய் நொடியில் இருந்து விடுபடவும், இரண்டு கோடி மக்கள் பங்கேற்கும், கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி, வரும், 26ல், சஷ்டி திதியன்று இணையதளம் வாயிலாக நடக்கிறது.'வாழும் கலை' அமைப்பு நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமை வகிக்கிறார். சமூக ஊடகங்கள் வழியாக, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது, மிக பிரமாண்ட ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக நிகழவிருக்கிறது. இதில் இணைய விரும்புவோர், 'பேஸ்புக் லைவ்' bit.ly/FBKavacham, 'யூ டியூப் லைவ்' bit.ly/YTKavacham ஆகிய முகவரிகளை டைப் செய்து, உள்ளீடு செய்து நுழையலாம். விபரங்களுக்கு, வாழும் கலை அமைப்பு பிரதிநிதிகள், தாஸ், 94433 56249, வெங்கடேஷ் 94433 70608 ஆகியோரின் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
24-ஜூலை-202011:38:22 IST Report Abuse
INDIAN Kumar நல்லவர்களை ஒருங்கிணைத்த முருகப்பெருமானுக்கு நன்றி
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
24-ஜூலை-202006:36:08 IST Report Abuse
Muguntharajan கறுப்பர் கூட்டம் ஒரு வீடியோ போட்டதற்கு இவ்வளவு வேலை செய்யனுமா? நல்லா வேலை வாங்குகிறார்கள். மேலும் அவர்களை பிரபலப்படுத்துவது போல் தெரிகிறது.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
23-ஜூலை-202022:33:15 IST Report Abuse
sridhar இந்த உணர்வை , எழுச்சியை பொது தேர்தல் வரை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X