பொது செய்தி

இந்தியா

டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்'

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
J&K, Discharge, Corona Positive, Govt Hospital, Test Positive, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, ஜம்மு, காஷ்மீர், கொரோனா, நெகடிவ், டிஸ்சார்ஜ், பாசிடிவ்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 15 பேருக்கு பரிசோதனையில் நெகடிவ் வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அடுத்த சில மணிநேரத்தில் அவர்களது மாதிரிகளை இரண்டாம்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் 12 பேருக்கு பாசிடிவ் வந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் குளிர்பான ஆலை ஒன்றில் பணிபுரிந்த ஒருவருக்கு ஜூலை 1ல் கொரோனா உறுதியான நிலையில் உடன் பணிபுரிந்த 15 தொழிலாளர்களின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் கொரோனா உறுதியானதால் கடந்த 1ம் தேதி 15 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் அனைவரும் 5ம் தேதி இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 17ம் தேதி மீண்டும் அவர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் நெகடிவ் என வந்தது. அதே நாளில், அவர்களது மாதிரிகளை சுகாதார அதிகாரிகள், இரண்டாவது சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் அனைவரையும் டிஸ்சார்ஜ் செய்துள்ளது.


latest tamil news



அன்று மாலையில் இரண்டாவது சோதனை முடிவுகள் வரவே, அதில் 15 தொழிலாளர்களில் 12 பேருக்கு பாசிட்டிவ் என வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த 12 பேரையும் கண்டறிய பணியில் சுகாதாரத்துறை இறங்கியது. அதற்குள்ளாக அவர்களில் சிலர் வேறு வேறு இடங்களுக்கு சென்றதால், அவர்களை தொடர்பு கொண்டு, எக்ஸ்ரே எடுக்க வேண்டும் எனக்கூறி மருத்துவமனைக்கு அழைத்து, கொரோனா பாசிட்டிவ் செய்தியை கூறியுள்ளனர். அவர்கள் 12 பேரும் தற்போது மருத்துவமனையில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பரிசோதனை முடிவு 'நெகட்டிவ்' என வந்ததின் அடிப்படையிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை பத்து நாட்களுக்கு பின் பரிசோதிக்கும் போது முடிவு நெகட்டிவ் என வந்தாலும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து டெஸ்ட் எடுத்து கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் இருக்கும் நிலையில் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஜூலை-202021:24:12 IST Report Abuse
தல புராணம் காஷ்மீரில் குத்து விளக்கு காட்டல அதனால் தான்..
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
23-ஜூலை-202018:53:25 IST Report Abuse
sundarsvpr கொரோனா ஒரு மர்மமான தோற்று. ஆரம்பம் முடிவும் அறியமுடியாத செப்புடு விளையாட்டு. ஒட்டுமொத்த கூட்டு முயற்சி அவசியம். ஒரு சிறிய தொய்வு பெரிய பாதிப்பு. அந்த சிறிய தொய்வு என்ன என்பதை காணுதல் முக்கியம். விழிப்புணர்வு இருக்கலாம். அரசு உண்மை நிலையை மறைக்காமல் மக்களை தெளிவுபடுத்தவேண்டும். மக்களிடையே அனைதியின்மை எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் சத்தியம் தான் காப்பாற்றும்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
23-ஜூலை-202018:24:21 IST Report Abuse
S. Narayanan எல்லாம் மாயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X