அமெரிக்காவை உளவு பார்க்க விஞ்ஞானிகளை பயன்படுத்திய சீனா

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Chinese, Consulate, San Francisco, china, us, Military Link, Researcher, Visa Fraud, FBI

வாஷிங்டன்: அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய சீன விஞ்ஞானிக்கு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன தூதரகம் அடைக்கலம் கொடுத்திருப்பதாக அமெரிக்க புலானாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

உயிரியல் ஆராய்ச்சியாளரான டாங் ஜுவான், அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சீன ராணுவத்துடன் தனக்குள்ள தொடர்பு குறித்து பொய் கூறியிருப்பதும், பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக, சீன தூதரகத்தில் தஞ்சமடைந்திருப்பதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஜூன் 26ம் தேதி விசா மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் டாங் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது விசா விண்ணப்பத்தில் சீன ராணுவத்துடனான தனது தொடர்பை அவர் மறைத்து வைத்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அதிகாரிகள், சீன ராணுவ சீருடையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் போர்த் ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக டாங் பணியாற்றி இருப்பதையும் விசாரணையில் கண்டறிந்தனர்.

ஜூன் 20 அன்று எஃப்.பி.ஐ விசாரணையின்போது, 'சீன ராணுவத்தில் பணியாற்றுவதை மறுத்த டாங், தனது சீருடையில் உள்ள சின்னத்தின் அர்த்தம் தனக்குத் தெரியாது என்றும், ராணுவ மருத்துவ பல்கலையில் கலந்துகொள்ள ராணுவ சீருடை அணிவது அவசியம் என்றும் டாங்கூறியதாக ஜூலை 20ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கலான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டாங்கின் வீடு மற்றும் மின்னணு ஊடகங்களைதேடியபோது, அவருக்கும் சீன ராணுவத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையை தொடர்ந்து, டாங், சான் பிரான்சிஸ்கோ சீன துணைத் தூதரகத்திற்கு தப்பிச் சென்று, பதுங்கியிருப்பதாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பல சீன விஞ்ஞானிகளின் பெயர்களை குறிப்பிட்டு வழக்கறிஞர்கள் கிரிமினல் புகார் அளித்துள்ளனர். அதில் சீன ராணுவ திட்டத்தின் ஒரு பகுதியாக குறிப்பாக எஃப்.எம்.எம்.யூ அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் - ராணுவ விஞ்ஞானிகளை பொய்யான காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காக கூறுகின்றனர். மேலும் சீன விஞ்ஞானிகளின் உண்மையான வேலைவாய்ப்பு பற்றி தவறான அடையாளம் அல்லது அறிக்கைகளுடன் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளனர்.


latest tamil newsசீனாவில் ராணுவ மேலதிகாரிகளின் வழிகாட்டுதலில், அமெரிக்க விஞ்ஞானிகளிடமிருந்து தகவல்களை நகலெடுக்கும் அல்லது திருடிய ஒரு ராணுவ விஞ்ஞானி என்பதற்கு குறைந்தபட்சம் ஆதாரங்கள் உள்ளன என்றும், சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் இந்த நபர்களுக்கு ஆதாரங்களை அழிக்க அறிவுறுத்தியதற்கான ஆதாரங்களும் உள்ளன என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த நபர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறுவது தொடர்பான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில், குறிப்பாக ஜின் வாங்கிற்கு எதிராக ஜூன் 7, 2020ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடந்த மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வாங் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து சீனாவின் தியான்ஜினுக்கு செல்ல முயன்ற போது, அவர் மீது விசா மோசடி புகாரும் கூறப்பட்டுள்ளது.

வாங்கின் கைது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இதை 'அப்பட்டமான அரசியல் துன்புறுத்தல்' என்று கூறினார். 'தனக்கு தெரிந்தவரை, வாங் ஜின் இருதய நோய்கள் துறையில் ஆராய்ச்சி செய்கிறார். அது அமெரிக்காவின் தேசிய நலனுக்கோ பாதுகாப்பிற்கோ எப்போதுமே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று காணவில்லை. சமீபத்தில் சீனாவை சேர்ந்த மக்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறும்போது அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரிக்கின்றனர் மற்றும் அவர்கள் கொண்டு சென்ற டிஜிட்டல் சாதனங்களும் ஆராயப்பட்டன' எனவும் தெரிவித்தார்.


latest tamil news
சீன ஹூஸ்டன் தூதரகம் மூடல்


முன்னதாக, அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை கட்டாயமாக மூடியதைத் தொடர்ந்து அமெரிக்கா - சீனா இடையே மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்டது குறித்து அமெரிக்கா இன்னும் தெளிவாக தெரிவிக்காத நிலையில், உளவுத்துறையுடன் சில தொடர்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அரசு மற்றும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியை திருட சீன ஹேக்கர்கள் முயன்றுள்ளதை அமெரிக்க வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். செனட் புலனாய்வுக் குழுவின் செயல் தலைவரான புளோரிடாவின் குடியரசு கட்சியை சேர்ந்த சென். மார்கோ ரூபியோ டுவிட்டரில், ஹூஸ்டன் தூதரகம் கம்யூனிஸ்ட் கட்சியின் பரந்த ஒற்றர்களின் வலையமைப்பின் மைய முனை' என்று விமர்சித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
23-ஜூலை-202020:13:36 IST Report Abuse
Darmavan சீனா முற்றிலும் அழிக்கப்பட வேண்டிய நாடு..இப்போது அது நடக்க வேண்டும்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
23-ஜூலை-202018:19:15 IST Report Abuse
madhavan rajan எப்பொழுது சீனா என்ற ஒரு நாடு தங்கள் தவறான செயல்பாடுகளால் நம்பிக்கையான நாடு அல்ல என்று உணரப்பட்டது நிச்சயம் அதிக சோதனைகள் செய்யத்தான் செய்வார்கள். அதில் தவறில்லையே. மரியாதை கொடுத்தார்கள். அதற்கேற்றவாறு நடந்துகொள்ளவில்லை. இப்போதும் அதே மரியாதையை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும். சீனாவின் குள்ளநரித்தனம் வெளிப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. பாக், நேபால் போன்ற சிறிய நாடுகள் வேண்டுமானால் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தைக் கணக்கிட்டு சீனாவை ஏற்றுக் கொள்ளலாம். அவர்களையே சீனா ஏமாற்றத்தான் போகிறது. வலுவான நாடுகள் எதற்கு சீனாவை நேர்மையாக இல்லாத பட்சத்தில் மதிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூலை-202018:13:38 IST Report Abuse
Chinnappa Pothiraj உலகின் நம்பத்தகாத நாடாக சீனா பல காலமாக உலகிற்கு நிரூபித்துக் ருசித்து. பிற நாடுகளின் அறிவுசார் அனைத்தும் திருடுவது,புறமுதுகில் குத்தும் துரோகித்தனம் அரசின் கொள்கையாகவே கொண்டுள்ளது. கடந்த காலங்களில் அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளை சீனா முன்பும் தற்போதும் உண்மையை மறுப்பதும் தான் அதற்கும். இப்பூவுலகில் அழிக்கப்படவேண்டியநாடு. இறைவனே செயலில் காட்டு. உலகமக்கள் சுபிட்சம் பெற, வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X