‛கடவுள் ராமர் கொரோனா தொற்றை கொல்வார்' : பா.ஜ தலைவர் நம்பிக்கை

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
BJP Leader, Lord Ram, ram temple, Covid Virus, Ram Mandir, Construction, corona, coronavirus, covid-19, corona cases, corona india, பாஜ, தலைவர், ராமர் கோயில், கொரோனா வைரஸ்

போபால்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் துவங்கியவுடன், உலகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றின் அழிவு துவங்குமென ம.பி.,யை சேர்ந்த பா.ஜ., தலைவர் ராமேஸ்வர் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு, 'அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில், அறக்கட்டளையை, மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில் அமைத்தது. கடந்த 18ம் தேதி நடந்த அறக்கட்டளை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை ஆக.5ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வருமாறு, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், ம.பி.,யின் குவாலியரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, மாஜி இடைக்கால சபாநாயகரும், பா.ஜ., தலைவருமான ராமேஸ்வர் சர்மா கூறியதாவது:'பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அரக்கர்களை கொல்லவும் மறுபிறவி எடுத்துள்ளார். ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா வைரஸ் தொற்று நோயின் அழிவும் துவங்கும். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு மட்டுமில்லாமல், புனித ஆத்மாக்களை நினைவில் கொள்ள வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.' இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இதனிடையே ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி பேசுகையில், 'பிரதமர் மோடி ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்வின் போது அனைத்து சமூக இடைவெளியும் பின்பற்றப்படும். இந்த நிகழ்வில் 150 அழைப்பாளர்களுடன் சேர்த்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி, ஹனுமான் கார்கி, ராம் லல்லா கோயிலுக்கு சென்று, மரம் ஒன்றை நட்ட பின்னர், பூமி பூஜையில் பங்கேற்பார்'என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-202022:00:04 IST Report Abuse
oce belief is good of course.but it should be in practical life.mere belief is nothing good.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-202021:51:46 IST Report Abuse
oce இந்த ஆண்டு மரணமடையும் பிரபலஸ்தர் எந்த துறையில் பிரபலஸ்தர்.இந்தயாவிலா உலக அளவிலா. குரோனாஅள்ளிக்கொணடு போகிறவர்களில் பிரபலஸ்தர்கள் எவரும் இல்லையா.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-202021:39:19 IST Report Abuse
 oce கிறிஸ்துவம் இஸ்லாம் போன்ற மதங்கள் மனிதர்களை தெய்வங்களாக வரித்தவை.ஆனால் இந்து மதம் அப்படி அல்ல பிரபஞ்ச சக்திகளை கடவுள்களாக வரித்து வழிபடுகிறது. உலக உயிரினங்கள் அனைத்தையும் கண்காணிப்பது பிரபஞ்சமே. உலகில் உயர்ந்தது இந்து மதம் ஒன்றே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X