வியாழன் நிலவின் வடதுருவ புகைப்படத்தை வெளியிட்ட நாசா

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
NASA, Jupiter Moon, North Pole, NASA's Juno spacecraft, Ganymede's north pole, நாசா, வியாழன், வடதுருவம்

வாஷிங்டன்: சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனின் நிலவான கனிமீடின் வடதுருவ புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதல்முறையாக வெளியிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஆக.11ல், வியாழன் கோள் குறித்து ஆராய்வதற்காக ஜூனோ என்ற விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது. இரண்டு ஆண்டுகள் பூமியை சுற்றி வந்த ஜூனோ விண்கலம், 2013ல் வியாழனை நோக்கி தனது பயணத்தை துவங்கியது. வியாழனின் நீள்வட்ட பாதையில் சுற்றி வந்த ஜூனோ, பல்வேறு புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பதாவது மிகப்பெரிய வடதுருவமான கனிமீடு புகைப்படத்தை நாசாவின் ஜூனோ விண்கலம் படம்பிடித்துள்ளது என முதன்முறையாக வியாழனின் துணை கோளான கனிமீடின் வடதுருவ புகைப்படத்தை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


latest tamil news


கனிமீடின் வடதுருவ புகைப்படம் வெளியான சில மணிநேரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்தது. மேலும் வியாழன் கோள் குறித்து பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியிருந்தனர். ஓ, இது அழகாக இருக்கிறது! ஹிப்னாடிக்! கனிமீட்டின் நிழலில் உள்ள வண்ண புள்ளிகள் என்ன என ஒருவர் பதிவிட்டார். இது மிகவும் அழகாக இருக்கிறது என மற்றொருவர் ஆச்சர்யத்துடன் பதிவிட்டார். குறிப்பாக வியாழனுக்கு எத்தனை துணை கோள்கள் உள்ளது என கெவின் என்பவர் வினவினார். அதற்கு நாசா தனது டுவிட்டர் பக்கத்தில், 79 ஜோவியன் நிலவுகள் உள்ளன. கனிமீடு முழுவதும் பனிக்கட்டியை கொண்டுள்ளது. அதன் கலவையில், ஜோவியன் நிலவுகள் உருவாகியதிலிருந்து இன்று வரை பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை தடயங்கள் உள்ளன என பதிலளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-202021:18:06 IST Report Abuse
oce இந்த பூமியில் இனி வைரஸ்கள் தலை விரித்தா‌டும் காலம் நெருங்கி விட்டது. மனிதன் மனிதனாக இனி வாழ்வதென்பது இயலாது.ஒவ்வொரு கிரகத்தை சுற்றிலும் ஏராளமான உப கோள்கள் உள்ளன.பூமயை காலி செய்து விட்டு அந்த உப கோள்கள் ஒன்றில் மனிதர் குடி ஏறுவதற்கான ஆயத்தங்களை இப்போதிருந்தே தொடங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X