பொது செய்தி

இந்தியா

பெண் ராணுவ அதிகாரிகளுக்காக அமைகிறது நிரந்தர குழு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
indianarmy, women officer, permanent commission, army, இந்திய ராணுவம், ராணுவம், பெண் அதிகாரிகள், நிரந்தர குழு, ராணுவம்,

புதுடில்லி: இந்திய ராணுவத்தில், பெண்களை உயர் பதவியில் அமர்த்துவதற்காக, நிரந்தர குழு அமைப்படுகிறது. இதற்கான முறையான கடிதத்தை மத்திய அரசு அனுப்பியுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ராணுவத்தில் பெண்கள் நீதிபதி, அட்வகேட் ஜெனரல் மற்றும் ராணுவ கல்வித்துறை ஆகியவற்றில் மட்டும் பணிபுரிந்து வரும் நிலையில், இந்த குழு அமைக்கப்படுவதன் மூலம் ராணுவ விமான பாதுகாப்பு(ஏஏடி), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமான போக்குவரத்து, மின்னணு மற்றும் மெகானிக்கல் பொறியாளர்கள்(இஎம்இ) ராணுவ சேவை கார்ப்ஸ், ராணுவ தொழிற்சாலை கார்ப்ஸ் மற்றும் உளவுத்துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


latest tamil news



ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்றும் வரும் பெண் அதிகாரிகளுக்கு, ஆண்களுக்கு நிகராக நிரந்தர பணி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்.,17 ல் உத்தரவு பிறப்பித்திருந்தது. பெண் அதிகாரிகளையம் நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்ககுள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. கொரோனா காரணமாக, 6 மாதங்கள் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்திருந்தது.
இந்நிலையில், ராணுவத்தில். பெண்களுக்கு நிரந்தர பதவி கிடைக்கவும், உயர் பதவி வகிக்கவும் வகையில் நிரந்தர குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-ஜூலை-202018:09:36 IST Report Abuse
வெகுளி இந்த குழுவில் இடமுண்டா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X