கிரீன் கார்டு பெற இந்தியர்களுக்கான காத்திருப்புக் காலம் 195 ஆண்டுகள்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Green Card, Wait List, Indian, US Senator, mike lee, Washington, us, united states, கிரீன்கார்டு, காத்திருப்பு, பட்டியல், இந்தியர்கள்,

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்டை, காத்திருப்போர் பட்டியலில் உள்ள இந்தியர்கள் பெற 195 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என செனட்டர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் கனவுகளில் ஒன்று நிரந்தர குடியுரிமை பெறுவது. வெளிநாடுகளில் இருந்து வரும் திறமையானவர்களுக்கு அமெரிக்காவே கிரீன் கார்டு வழங்கி தங்கள் நாட்டின் குடிமக்களாக்கிவிடும். மற்றவர்கள் தங்கள் வேலையின் அடிப்படையில் கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் 2019 நிதி ஆண்டில் 9,008 இந்தியர்கள் ஈபி 1 வகை கிரீன் கார்டினையும், 2,908 பேர் ஈபி 2 வகையையும் மற்றும் 5,083 பேர் ஈபி 3 வகை கிரீன் கார்டினையும் பெற்றுள்ளனர்.


latest tamil news


இது தவிர லட்சக்கணக்கான இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்துள்ளனர். இன்று காத்திருப்போர் பட்டியலில் ஒரு இந்தியர் இணைந்தால் அவருக்கு 195 ஆண்டுகளுக்கு பிறகே கிரீன் கார்டு கிடைக்கும். அவரது குழந்தை இந்த காலக்கட்டத்தில் அங்கு வளர்ந்தால் 21 வயதான பின்பு நாடு கடத்தப்படும். இந்த சிக்கல்களை போக்க, குடியேறியவர்களின் குடும்பங்களை பாதுகாக்கவும், அவர்களின் குடியேற்ற நிலையை இழக்காமல் வேலைகளை மாற்றிக்கொள்ளவும், பயணிக்கவும் கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என செனட் சபையில் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்டர் மைக் லீ பேசியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-202014:47:05 IST Report Abuse
Rasheel இந்தியாவில் மைனாரிட்டி, மெஜாரிடியை கொடுமை படுத்துகிறது. பிள்ளை பெறுவதில், பலதார திருமணம் செய்வதில், மன விலக்கு பெறுவதில், நாட்டிற்கு எதிராக சதி செய்வதில், சட்டவிரோத தொழில்கள் செய்வதில், குண்டு வைப்பதில், இன்னும் பல. சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும், எல்லா குடிமகனுக்கும் ஒரே சிவில் சட்டம் என்பது எப்போது? இந்த அக்கிரமம் எந்த நாட்டிலும் கிடையாது.
Rate this:
Cancel
Shiv Ram - Chennai,இந்தியா
23-ஜூலை-202020:52:55 IST Report Abuse
Shiv Ram 195 வருடம் உலகில் இந்த மனித இனம் இருக்குமா என்று முதலில் பாருங்கள். நிரந்தரம் அற்ற மனித வாழ்வு. இவ்வளவு அறிவியல் வளர்ந்த யுகத்தில், கண்ணுக்கு தெரியாத ஒரு உயிர் அற்ற, ஆனால் உயிர் பெறக்கூடிய கொரோனா காவு வாங்கி வருகிறது. மனித இனம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம். அதிக பணத்தையும் புகழையும் தேடிய பயணம் விரைவில் அழிவில் முடிவடையும்.
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-202019:15:18 IST Report Abuse
Ashok Subramaniam ஒடுக்கப்பட்டவர்னு சொல்லி சொல்லியே ஓசிச் சோறு சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிப்போச்சே.. தமிழினம், தமிழ் அப்படீன்னு சொல்லி குதிக்கிற ஆசாமிகள் எல்லாம், மலையாளிகளிடம் போய் சொல்லட்டுமே.. அப்பா நீங்களெல்லாம் பூர்வ தமிழ் குடிகள்... சேரர்கள்.. மலையாளம்னு ஒரு மொழியே ஆயிரம் வருடங்களுக்கு முன்னால கிடையாதுன்னு.. தமிழ் நாடு மட்டுமே திராவிடம்னு சொல்லிட்டு, ஆரியன், திராவிடன்னு பிரிவினைப் பேசறதெல்லாம் யாரு? ஓசிச் சோறு கும்பல்தானே. தமிழ்ல நாலு வார்த்தை ஒழுங்கா நாலு வார்த்தைப் பேசவராது.. ண,ந ன உச்சரிப்பு வித்தியாசம் தெரியாது.. ழ வராது, ள/ல உச்சரிப்புத் தகறாறு.. இலக்கியங்கள் என்ன இருக்குன்னும் தெரியாது.. சரித்திரம் தெரியாது.. ஆனால், வெறுப்பு அரசியல் நடத்தும் வியாபாரிகளிடம் விலைபோய்.. க்வார்ட்டருக்கும், பிரியாணிக்கும் கூச்சல் போடற அள்ளக்கை வெத்துவேட்டெல்லாம் இன்னிக்கு ஒடுக்குவதைப் பத்திப் பேச ஆரம்பித்துவிட்டது... வெக்கமா இல்லை? உள்ளூர் அரசியலே இதுக்கு அரிச்சுவடிகூட தெரியாது (அரிச்சுவடியே என்னன்னு தெரியாதுங்கறது வேற விஷயம்).. இதுல அமெரிக்கா அரசியல் வேற ஒரு கேடா "உலகம் எல்லாம் ஓன்று ,மனிதம் எல்லாம் ஓன்று " என்பதை தலித், முஸ்லீம், கிறிஸ்தவர், நாடார், முதலியார், வன்னியர் அப்படீன்னு ஓட்டு வங்கி பாலிடிக்ஸ் செய்யும் உங்கள் தலீவர்களிடம் சொல்லிப்பாருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X