பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தை தொடும் கொரோனா; ஒரே நாளில் 6,472 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 23) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆகவும், பலி எண்ணிக்கை 3,232 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,423 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 49 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 62,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 21 லட்சத்து 57 ஆயிரத்து 869 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news


இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,933 பேர் ஆண்கள், 2,539 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,17,252 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 75,689 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 793 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,232 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,699 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1.59,384 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 ஆயிரத்து 881 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
24-ஜூலை-202016:33:48 IST Report Abuse
 Sri,India பொது இடத்தில் நின்று புகை பிடிக்கும் அநாகரீக கூட்டத்தால் நோய் பரவல் அதிகரிக்கிறது .மீண்டும் இரண்டு மணிக்கு மேல் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் . மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியயை காலி செய்யும் மது , சிகரெட் விற்பனைக்கு தடை வேண்டும் . பெட்டிக்கடைகளை,டாஸ்மாக் போதை கடைகளை இரண்டு மாதத்திற்கு திறக்க வேண்டாமே ?? .
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
24-ஜூலை-202016:26:27 IST Report Abuse
 Sri,India ஊரடங்கை தளர்த்தியதன் விளைவு இது . பலமுறை சொன்னேன் . மொத்த வியாபார பலசரக்கு காய்கறி சந்தைகள் திறக்கப்பட்டால் கட்டியம் னாய் தோற்று அதிகரிக்கும் என்று .. இரவு வரை மக்களை நடமாடவிட்டு விட்டு நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மக்களை கஷ்டப்படுத்த வேண்டுமா??
Rate this:
Cancel
Balaji Loganathan - Salem,இந்தியா
24-ஜூலை-202013:21:44 IST Report Abuse
Balaji Loganathan சார் தயவு செய்து மாவட்ட வாரியாக கொரோன பரிசோதனை மையம் மற்றும் கொரோன சிகிச்சை மையம் (அரசு மற்றும் தனியார்) தகவல் வெளியிடவும் ...நன்றி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X