பொது செய்தி

இந்தியா

பார்வையற்றவருக்கு உதவிய கேரள பெண்ணுக்கு வீடு பரிசு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
Kerala Woman, Rewarded, New House

திருவனந்தபுரம்: கேரளாவில் பஸ்சை நிறுத்தி பார்வைற்றவருக்கு உதவிய கேரள பெண் வைரலாகிய நிலையில், அவரை நேரில் அழைத்து பாராட்டிய அவரது முதலாளி, அவருக்கு வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

கேரளாவில் பிரபல நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் சுப்ரியா என்பவர், பார்வையற்ற ஒருவருக்காக பஸ்சை நிறுத்தி, அவரை கைபிடித்து கூட்டிச் சென்று பஸ்சில் ஏற்றி விட்டார். இதனை அப்பகுதியிலுள்ள மாடியிலிருந்து ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, கடந்த வாரம் முதல் அது வைரலாகி பரவியது. இது சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அவரது மனித நேயத்தை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில், சுப்ரியா வேலை செய்யும் நகைக்கடையின் உரிமையாளர் சுப்ரியாவை நேரில் அழைத்து அவரை பாராட்டியதுடன், வீடு ஒன்றை பரிசளித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து சுப்ரியா கூறுகையில், 'என்னுடன் பணிபுரிந்தவர்கள் வாழ்த்து தெரிவித்த போது, அழுகை வந்துவிட்டது. முதலாளி வீடு பரிசளிப்பார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. மனிதாபிமான முறையில் சாதாரணமாக செய்த செயல், இவ்வளவு பாராட்டுகளை பெறும் என நினைக்கவில்லை' என்றார்.

தனது கணவர், இரு குழந்தைகளுடன் சுப்ரியா வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவர் செய்த செயலால் வீடு பரிசாக கிடைத்துள்ளதை, நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nallavan - manigramam,பஹ்ரைன்
27-ஜூலை-202017:47:32 IST Report Abuse
nallavan வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
தங்கை சிவா, TZR ( ஜூரோங் வெஸ்ட்,  சிங்கப்பூர், ) நீ என்ன விதைக்கிறாயோ ...அதுவே விளையும் .....
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
26-ஜூலை-202019:44:56 IST Report Abuse
VELAN S "எங்க முதலாளி தங்க முதலாளி பிள்ளை மனம் கொண்ட எங்க தங்க முதலாளி எங்களுக்கெல்லாம் இங்க சொத்து சுகம் தான் " என்று இந்த பெண் பாடிக்கொண்டிருக்கிறார் , வாழ்க தினமலர் , இந்த செய்தி வெளியிட்டதற்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X