பொது செய்தி

இந்தியா

கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் ரூ 1 லட்சம் அபராதம், 2 வருடம் ஜெயில்: ஜார்க்கண்டில் அவசர சட்டம்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ரூ 1 லட்சம் அபராதம் மற்றும் 2 வருடம் சிறைதண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது



latest tamil news


கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அது வேகமாக பரவி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் ஜெயில்தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை மீறுதல், அலுவலகஙகள், கடைகளில் விதிகளை மீறி கூட்டமாக திரளுதல் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு இரு வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இதுவரை கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனைச் சட்டம் எதுவும் இல்லாததால், தவறு செய்பவர்களை தண்டிக்க இயலாமல் போய்விட்டதாக அவர் கூறினார்.


latest tamil news


நேற்று புதிதாக 439 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது. தொற்று மேலும் பரவாமல் தடுக்க இந்த வாரம் கடைசி வரை மாநிலத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-ஜூலை-202021:04:19 IST Report Abuse
NicoleThomson நம்மூரிலும் இப்படி பண்ணலாமே
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-ஜூலை-202020:59:17 IST Report Abuse
Ramesh Sargam இது, இதைத்தான் செய்யணும். இல்லையென்றால், நம் மக்கள் திருந்தவே மாட்டாங்க. வைரஸும் நம்மை விட்டு போகாது. உடனே இந்த அவசர சட்டம் நாடு முழுவதும், மத்திய அரசினால் செயல்படுத்தப்படவேண்டும். குறிப்பு: இது எல்லோருக்கும் பொருந்தும்படியாக அமுல்படுத்தப்படவேண்டும். அவன் எப்படிப்பட்ட கொம்பனா இருந்தாலும் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X