கொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (3)
Share
Amitabh Bachchan, Recovered, Covid19

மும்பை: மும்பை நானாவதி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில், நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 10,576 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,37,607 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கடந்த ஜூலை 11ம் தேதி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ,அவரது மகன் அபிஷேக் ஆகியோரை தொடர்ந்து மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராதயாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு பிரபலங்களும் அமிதாப் குடும்பத்தினர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர சிறப்பு பிரார்த்தனையும் ஈடுபட்டனர்.


latest tamil news


கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லையென முடிவுகள் வந்துள்ளதால், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற பரிசோதனை முடிவுகளும் இயல்பாக இருப்பதாக வந்துள்ளதால் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் அமிதாப் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதே போல், அபிஷேக் பச்சனின் உடல்நலம் சீராக இருப்பதாக முடிவுகள் வந்துள்ளது. அபிஷேக்கும் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. ஆனால் சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X