ம.பி.யில் தொடரும் ராஜினாமா படலம்: மற்றொரு காங். எம்.எல்.ஏ. இன்று ராஜினாமா:

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Congress MLA Narayan, Patel resigns ,Madhya Pradesh Assembly

போபால்: மத்திய பிரதேசத்தில் காங். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா படலம் தொடர்கதையாகி வருகிறது.
இம்மாநிலத்தில் முன்னர் காங். ஆட்சியின் போது மூத்த காங். தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 அதிருப்தி எம்.எல்..ஏ.க்கள் பா.ஜ.விற்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து அங்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பா.ஜ. ஆட்சி மலர்ந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன் அம்மாநில காங். எம்.எல்.ஏ. பிரதியுமான்சிங் தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.வில் இணைந்தார். கடந்த ஜூலை 17-ம் தேதி சுமித்ரா தேவி கஸ்டேகர் என்ற மற்றொரு பெண் காங். எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.வில் இணைந்தார்.


latest tamil news



இந்நிலையில் இன்று நாராயண் படேல் என்ற மற்றொரு காங். எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராமேஷ்வர் சர்மாவிடம் அளித்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

இதன் மூலம் காங். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா படலம் தொடர்கதையாகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 90 எம்.எல்.ஏ.க்களாக இருந்த காங்.கின் பலம் குறைந்து கொண்டே போகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
23-ஜூலை-202022:00:24 IST Report Abuse
sankaseshan சோனியா காந்தி அறக்கட்டளை பணத்திலிருந்து நிதி கொடுத்து உறுப்பினர்கள் போவதை தடுத்திருக்கலாம எஙசெய்யவில்லை நல்லாவா நல்லவா ?
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
23-ஜூலை-202020:32:22 IST Report Abuse
sankaranarayanan மத்தியப்பிரதேசத்தில் கான்கிராஸின் தற்போது நிலைமை, கழுதை தேய்ந்து கட்ட எறும்பாக ஆனது போல
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜூலை-202019:37:16 IST Report Abuse
தமிழ்வேல் 300 கோடின்னா சும்மாவா ?
Rate this:
23-ஜூலை-202021:02:08 IST Report Abuse
chandran, pudhucherry காசு தந்தா எதை வேண்டுமானாலும் திம்பானுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X