ஹாங்காங் குடிமக்களை தன்வசப்படுத்த முயலும் பிரிட்டன்: சீனா குற்றச்சாட்டு..!

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

பீஜிங்: முன்னொரு காலத்தில் பிரிட்டன் காலனியாக இருந்த ஹாங்காங் தன்னிச்சையாக செயல்பட்டுவந்தது. தற்போது சீனா தனது ஐந்து அம்ச சட்டத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலம் தன்னிச்சையாக செயல்படும் ஹாங்காங்கை முழுவதுமாக கட்டுப்படுத்த நினைக்கிறது.



latest tamil news



இதனை அடுத்து பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் மோதல் தொடங்கியது. ஹாங்காங்கில் வசிக்கும் குடிமக்கள் 'பிரிட்டிஷ் நேஷனல் ஓவர்சீஸ்' என்னும் வீசாவைப் பெற்றுவிட்டால், பிரிட்டனில் தங்கி தொழில் செய்யலாம், பல்கலைக்கழகத்தில் பயிலலாம் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலையும் பார்க்கலாம். இவ்வாறு பல ஆண்டுகளாக பிரிட்டனில் குடியிருக்கும் ஹாங்காங் மக்கள் பின் நாட்களில் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை பெறமுடியும். இந்தத் திட்டம் சீனாவை எரிச்சலடைய வைத்தது. இதனால் சீன உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் பிரிட்டன் சர்வதேச சட்டத்தை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.

பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி பாட்டீல் கடந்த புதனன்று இதனை அறிவித்தார்.இது தற்போது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்தத் திட்டம் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் துவங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டனில் நிரந்தர குடிமக்களாக விரும்பும் ஹாங்காங் மக்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என பிரிட்டன் உள்துறை அறிவித்துள்ளது.

ஹாங்காங்கை முழுவதுமாக கையகப்படுத்த நினைக்கும் சீனாவுக்கு பிரிட்டனின் இந்த சட்டம் பெரும் தொல்லையாக உள்ளது. இதனால் சீன கம்யூனிச ஆட்சியை விரும்பாத மக்கள் நிரந்தரமாக பிரிட்டன் செல்ல முடியும். இவ்வாறு ஒவ்வொருவராக ஹாங்காங்கை விட்டு வெளியேறி பிரிட்டன் குடிமக்களாவது சீனாவுக்குப் பிடிக்கவில்லை. இதன் விளைவாக கிட்டத்தட்ட முப்பது லட்சம் பழங்குடி மக்கள் பிரிட்டனுக்கு இடம்பெயருவர் என பிரிட்டன் அரசு கணிக்கிறது.


latest tamil news



கடந்த 1997ஆம் ஆண்டு பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை ஹாங்காங்கில் இருந்து விடுவித்துக்கொள்வதாக அறிவித்தது. பின்னர் ஹாங்காங் முழுவதுமாக சீனாவுக்கு செல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டது. ஆனால் சீனா ஹாங்காங்கின் சில சட்டங்களைக் கட்டுபடுத்தி வந்தது. தற்போது ஹாங்காங்கை முழுவதுமாக தன்வசப்படுத்த முயலும் சீனாவின் முயற்சிக்கு இடையில் ஹாங்காங் மக்களை முழுவதுமாக பிரிட்டனுக்கு குடிபெயர பிரிட்டன் அரசு முயன்று வருகிறது. வர்த்தக தலைநகரான ஹாங்காங்கில் உள்ள மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கம் பிரிட்டனுக்குச் சென்று விட்டால் எதிர்காலத்தில் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-ஜூலை-202021:06:26 IST Report Abuse
NicoleThomson அது சரி சீனாவில் மக்கள்தொகைக்கா பஞ்சம் , போறானுங்க போங்கடா என்று சீனர்களை குடியமர்த்தினால்?
Rate this:
Cancel
Puratchi Thondan (a) Senathipathy - Chennai,இந்தியா
23-ஜூலை-202020:45:51 IST Report Abuse
Puratchi Thondan (a) Senathipathy கொடுத்து வச்ச ஹாங்காங் மக்கள் ஹ்ம்ம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X