பொது செய்தி

இந்தியா

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
santosh babus wife, appointed, deputy collector, telangana

ஐதராபாத்: லடாக் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி, துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இந்நிலையில், இத்தாக்குதலில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த, தெலுங்கானாவைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு, துணை கலெக்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.


latest tamil newsசந்தோஷிக்கு ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் பணி வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவரது பணிகள் அனைத்தும் தெரியும் வரை கலெக்டர் அலுவலகத்தில் இருப்பவர்கள் அவருக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு 711 சதுர அடியில் வீடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ராணுவ வீரரின் குடும்பத்தை சேர்ந்த 20 பேர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
29-ஜூலை-202022:46:05 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி பணம் வீடு இதெல்லாம் கொடுத்து ராணுவ வீரரின் தியாகத்துக்கு கவுரவம் கொடுப்பது பாராட்டுக்குரியது. சப் கலெக்டர் என்பது மிகவும் பொறுப்புமிக்க பதவி. இதற்குறிய தகுதி இருந்து வழங்கியிருந்தால் நல்லது.
Rate this:
Cancel
23-ஜூலை-202023:58:36 IST Report Abuse
S Gopalakrishnan ஊரான் வீட்டு நெய்யே என் பொண்ணாட்டி கையே.
Rate this:
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
24-ஜூலை-202013:43:05 IST Report Abuse
Subramaniyam VeeranathanOur senior defense officer's life is other house lady's hand for you. Are you a true Indian????...
Rate this:
Cancel
23-ஜூலை-202023:58:36 IST Report Abuse
S Gopalakrishnan ஊரான் வீட்டு நெய்யே என் பொண்ணாட்டி கையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X