சீனாவை துவம்சம் செய்யும் புயல் மழை; வெள்ளப் பெருக்கால் 3 கோடி பேர் பாதிப்பு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த சில நாட்களாக, புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் வரலாறு காணாத அளவு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகள், விவசாய

பீஜிங்: சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.latest tamil news
சீனாவில் கடந்த சில நாட்களாக, புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் வரலாறு காணாத அளவு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேதமடைந்து உள்ளன. மேலும் அங்கு கனமழைக்கான சூழல் நிலவுவதால், ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news'சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 11 மில்லியன் டாலர் அளவில் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் கடும் சேதத்துக்கு உள்ளான ஆயிரக்கணக்கான கிராமப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்' சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


latest tamil news'சீனா இத்தகைய கனமழையை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தாலும், 1961க்குப் பிறகு அதன் அளவு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனா வேகமாக நகரமயமாதலை நோக்கி நகர்ந்து வருகிற நிலையில் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. குறிப்பாக, விவசாய நிலங்களை அழித்து கட்டடங்களைக் கட்டி வருவது, தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணாமாக சீனா இத்தகைய இயற்கைச் சீற்றத்துக்கு எளிய இலக்காக மாறியுள்ளது' என, வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202012:40:00 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) இயற்கை சீற்றத்தை யாராலும் வெல்ல முடியாது. தெய்வம் எப்போதும் நின்று தான் கொல்லும்
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
27-ஜூலை-202016:12:27 IST Report Abuse
S.P. Barucha இந்திய எல்லையை ஒட்டியுள்ள சி மாகாணங்களில் இன்னும் பத்து நாட்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்படும்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூலை-202001:23:14 IST Report Abuse
Tamilan ட்ரில்லியன் டாலர் நாட்டிற்கு 11 மில்லியன் டாலர் கால் தூசு போன்று . இதனால் உலகம் பெரிதும் போற்றும் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை .
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )ஒனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X