லோக்சபா, 7 சட்டசபை இடை தேர்தல் நிலை? தேர்தல் ஆணையம் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லோக்சபா, 7 சட்டசபை இடை தேர்தல் நிலை? தேர்தல் ஆணையம் ஆலோசனை

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020
Share

புதுடில்லி: ஒரு லோக்சபா மற்றும் 7 சட்டசபைக்கான இடைத்தேர்தலின் காலக்கெடு முடிவடைந்தது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நாளை (ஜூலை 24) நடத்த உள்ளது.



latest tamil news



இது குறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய தேர்தல்சட்டப்படி ஒரு இடம் காலியாகி விட்டால் அடுத்தஆறு மாத காலத்திற்குள் அந்த இடத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். தற்போது ஒரு லோக்சபா தொகுதி, பீகார்,தமிழகம், உ.பி.,ம.பி., அசாம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் எம்.எல்.ஏக்கள் மரணம் அடைந்த காரணமாக 7 சட்டசபைக்கு இடை தேர்தல் நடத்தப்பட வேண்டும்
இந்த எட்டு இடங்களுக்குமான காலியிடங்கள் கடந்த ஆண்டு ஜூலை, ஆக., செப்.,மாதங்களில் ஏற்பட்டது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு ஆறு மாத காலத்திற்கும் மேலாகிறது.
மேற்கண்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாமல் ஆறு மாதங்களுக்கு மேல் ஆவதால் அத்தொகுதிகளின் நிலைமை குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தை அணுக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news



மேலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்செப்.,7 ம் தேதிக்கு பிறகு நடத்தப்பட உள்ள சட்டபை இடை தேர்தல் குறித்தும் குறிப்பாக எட்டு இடங்களுக்கான தேர்தல் குறித்தும் நாளை (ஜூலை 24) நடைபெற உள்ள தேர்தல்ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X