சிறார் பாலியல் வழக்கு: வாஷிங்டன் மாஜி பிஷப் மீது புதிய புகார்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
சிறார், பாலியல் வழக்கு,  வாஷிங்டன், மாஜி, பிஷப், புகார்

வாஷிங்டன் : கடந்த 1980 களில், மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, வாஷிங்டன் மாஜி பிஷப் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றொரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தி: நியூஜெர்சியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நியூஜெர்சியின் மிச்சிகன் பிஷப்பாக தியோடர் மெக்கரிக் இருந்த போது, அவர் மற்றும் மேலும் 5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அதில் நான்கு பேர் கடற்கரை வீட்டில் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

கத்தோலிக்க கல்விக்காக ஒரு பாதிரியாரை சந்தித்த போது, அவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், மெக்கரிக்கிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அது முதல், அவரும் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


latest tamil news



இந்த வழக்கில் தியோடர் மெக்கரிக் தவிர்த்து, பாதிரியார்கள் அந்தோணி நார்டினோ, ஆண்ட்ரு தாமஸ் ஹெவிட், ஜெரால்ட் ரூனே, மைக்கேல் வால்டர், ஜான் லாபெராரா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 2019 ல் 7 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. மெக்கரிக் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2018 ல் போப் பிரான்சிஸ் உத்தரவிட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த 2018 ல் தியோடர் மெக்கரிக் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தன் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்திருந்தார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
24-ஜூலை-202016:51:36 IST Report Abuse
தமிழ்வேள் அடுத்த மதத்தவரை சாத்தான் என்று திட்டும் இவர்கள் தாங்களே சாத்தானின் மறுஉருவாக இருப்பதை மறந்து விடுகிரார்கள் ..அது என்னது ? இந்த கிழட்டு பயல்கள் சொல்லிவைத்தது போல எல்லோரும் ஐரோப்பிய அமெரிக்கா நாடுகள் முழுவதிலும் இளம் சிறார்களை மட்டுமே தேடி இம்சை கொடுக்கிறார்கள் ? ஒருக்கால் கன்னிமார்கள் இவர்களை வெட்டி விடுவார்கள் என்ற பயமோ ?
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
24-ஜூலை-202004:10:59 IST Report Abuse
Rajesh யாருக்கு யாருடா பாவ மன்னிப்பு தருவது? எந்த மனிதனும் யாரிடமும் [இறைவனை தவிர] அவர்களின் பிழையை, பிரச்சனையை கூற தேவையில்லை.....
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
24-ஜூலை-202002:50:53 IST Report Abuse
anbu இவர் பாலியலார் என அழைக்கப்படுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X