சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்துறை விசாரணையில் விவசாயி மரணம் : கிராமத்தினர் மறியல் போராட்டம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
வனத்துறை விசாரணையில் விவசாயி மரணம் : கிராமத்தினர் மறியல் போராட்டம்

திருநெல்வேலி: வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி இறந்த சம்பவத்தில் நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரைமுத்து 64. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் காய்கறிகள் பயிரிட்டுள்ளார்.வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பிற்காக தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார். இதற்கு இலவச மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளார்.இதுகுறித்து வந்த புகாரின் பேரில் கடையம் வனத்துறையினர், மின்துறையினருடன் சென்று தோட்டத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அவரை இரவில் சிவசைலம் வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் மயங்கிவிழுந்தார். சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தார்.அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குளம் தி.மு.க.,எம்.எல்.ஏ.,பூங்கோதை பங்கேற்றார்.பிரேதபரிசோதனை முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X