கொரோனா காலத்தில் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: குஜராத் அரசு அதிரடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா காலத்தில் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: குஜராத் அரசு அதிரடி

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020
Share

காந்திநகர்: கொரோனா பாதிப்பால் மூடப்பட்டு கிடந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என குஜராத் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.



latest tamil news


அதே நேரம் 2020-21 கல்வியாண்டில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை ஊரடங்கு காலத்திற்கான கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது. கொரோனா பாதிப்பை முன்னிட்டு சலுகைகளை அறிவிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்த வேண்டும் என 3 பொது நல வழக்குகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இந்த உத்தரவால் சுமார் 35 லட்சம் மாணவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறப்படும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை உடனடியாக நிறுத்துவதாக பள்ளிகள் அறிவித்துள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X