கோவை: கோவையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில், 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 3,000ஐ நெருங்கியுள்ளது.
4 நாட்களில் 721 பேர் பாதிப்பு
கோவை ராக்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்கனவே 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணியாற்றி வரும் இருவர்; மேட்டுப்பாளையம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 8 வயது சிறுமி, பீளமேடு, நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லுார், ராமநாத புரம் பகுதிகளில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த தலா ஒரு நர்ஸ் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, குனியமுத்தூரில் - 9, போத்தனூர்ர் - 8, மதுக்கரை - 8, குரும்பம்பாளையம் - 8, பீளமேடு - 6, குறிச்சி - 6, சென்னப்பசெட்டி புதூர் - 7, கரும்புக்கடை - 5, கோவைப்புதூர் - 4 உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 238 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,777 ஆக உயர்ந்தது. இதில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் 721 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பலி 5... 'டிஸ்சார்ஜ்' 198
மேலும் கோவையில் இன்று ஒரே நாளில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கோவையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது. மேலும், கோவையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் இன்று உயிரிழந்தார்.
அதேசமயம், கோவையில் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 198 பேர் குணமடைந்ததால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். கோவையில் தற்போது 1,270 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE