பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் ஒரே நாளில் 9,895 பேருக்கு கொரோனா; 298 பேர் பலி

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
Maharashtra, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, Mumbai,

மும்பை: மஹா.,வில் இன்று(ஜூலை 23) ஒரே நாளில் 9,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3.47 லட்சமாக உயர்ந்தது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூலை 23) மட்டும் 9,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,47,502 ஆக அதிகரித்தது.

இன்று மட்டும் 298 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 12,854 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 6,484 பேர் குணமாகினர்; இதனையடுத்து இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,94,253 ஆக உயர்ந்தது. 1,36,980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news




மும்பையில்...


மும்பையில் புதிதாக 1,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1,05,829 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 55 பேர் பலியானதையடுத்து, அங்கு மொத்த பலி 5,927 ஆக உயர்ந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X