பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் புதிதாக 5,030 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,030 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,863 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,616 ஆக உயர்ந்துள்ளது.



latest tamil news



அதே நேரம் அங்கு புதிதாக 2.071 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 29,310 பேர் குணமடைந்தனர். இன்றைய தேதியில் மாநிலம் முழுவதும் 49,931 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 640 பேர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


கடந்த ஒரே நாளில் பெங்களூருவில் மட்டும் 2,207 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு மட்டும் 39,200 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்த நிலையில் 29,090 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் பெங்களூருவில் 1,038 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். நகரில் மொத்தம் இதுவரை 9,326 பேர் குணமடைந்த நிலையில் 783 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
23-ஜூலை-202022:08:59 IST Report Abuse
Visu Iyer ஊரடங்கு கட்டுப்பாடு கொரானாவை தடுக்காது.. என்று செய்தி படித்ததாக நினைவு..அதானே.. ஊரடங்கு எதற்கு..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X