தமிழ்நாடு

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு : ஓ.பி.எஸ். கண்டனம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு : ஓ.பி.எஸ். கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு விஷமிகள் காவித்துண்டு அணிவித்த சம்பவத்திற்கு துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வில்லியனூர் அருகே தமிழகமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு விஷமிகள் சிலர் காவித்துண்டு அணிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த புதுச்சேரி அ.தி.மு.க. வினர் சிலை முன் அமர்ந்து தர்ணா செய்தனர். பின்னர் காவியத்துண்டு அகற்றப்பட்டு மாலை அணிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழக அ.தி.மு.க., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்., டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் எம்.ஜி.ஆர். தலைவர்கள் சிலைகள் அவமதிப்போர் மீது புதுச்சேரி அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X