பொது செய்தி

இந்தியா

ரபேல் விமானங்களில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தம்: விமானப்படை பலம் அதிகரிப்பு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படும் ரபேல் விமானங்களில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் இந்திய விமானப்படையின் பலம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news



லடாக் எல்லை பிரச்னையில் சீனாவுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய விமானப்படையில் வலு சேர்க்க உள்ள ரபேல் போர் விமானங்களில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு பிரான்சிடமிருந்து 60,000 கோடி ரூபாய்க்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க 2016ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டடது. அதில் ஒரு கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் வரும் 29ம் தேதி இந்தியா வர உள்ளன. இந்த விமானங்களில் பொருத்தப்படும் நீண்ட தூர இலக்கை தாக்கும் ஸ்கேல்ப் ஏவுகணை, வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் மெடியர் ஏவுகணைகளும் அதற்கு முன் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அந்த விமானங்களில் பொருத்துவதற்காக பிரான்ஸிடமிருந்து ஹம்மர் ஏவுகணைகளையும் இந்திய விமானப்படை வாங்குகிறது. பாதுகாப்பு படைக்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் அவசர கால கொள்முதல் சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் தரப்பிலும் ஏவுகணைகளை உடனடியாக இந்தியாவுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹம்மர் ஏவுகணைகள் பிரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படைக்காக நடுத்தர தொலைவில் உள்ள இலக்கை தாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 60 முதல் 70 கி.மீ., வரை தரையில் உள்ள இலக்கை. வானில் இருந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.


latest tamil news



மலைப்பகுதியான இடம் உள்ளிட்ட எந்த விதமான நிலப்பரப்பிலும் உள்ள இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட முடியும். நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரபேல் விமானங்கள் பாகிஸ்தான், சீனாவை எதிர்கொள்வதற்கு இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும் என நம்பப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
24-ஜூலை-202010:43:00 IST Report Abuse
vnatarajan போர் விமானங்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் நம்முடைய போர் திறமை என்னவென்று உலகுக்கு தெரியவரும் முக்கியமாக சைனா பாகிஸ்தானுக்கு தெரிய வேண்டும். இவர்களுடன் சமாதான போக்கை இனிமேல் கைவிட வேண்டும். வலுவுக்கு சண்டைக்கு போகவேண்டாம். ஆனால் இனிமேல் வந்த சண்டையை விடவேண்டாம். நம்முடைய படைவீரர்கள் மிகவும் திறமையானவர்கள். இனிமேல் எப்போதும் வெற்றி இந்தியாவிற்கே. வாழ்க இந்தியா
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
24-ஜூலை-202009:47:09 IST Report Abuse
Madhusoodhana Ramachandran சைனா கைக்கூலிகளுக்கு திகில் கிளப்பாதீர்கள்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-ஜூலை-202008:38:41 IST Report Abuse
Sampath Kumar இந்த விமான ஊழல் மறைந்து விட்டதா அல்லது வழக்கம் போல மறைக்க பட்டதா ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X