சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கெலாட்டின், 'மேஜிக்!'

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 கெலாட்டின், 'மேஜிக்!'

'ஓஹோ... இவர் முதல்வர் பதவியில் நீடிப்பதற்கு, இது தான் காரணமா...' என, ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டை பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அந்த மாநில அரசியல்வாதிகள்.

ராஜஸ்தானில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், சச்சின் பைலட்டுக்குத் தான், முதல்வர் பதவி கிடைக்கும் என, அனைவரும் நினைத்தனர். அந்த பதவியை, கெலாட் தட்டிச் சென்றார். ஆனால், கெலாட்டுக்கும், காங்கிரஸ் மேலிடத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிந்தவர்களுக்கு, இதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை.

அசோக் கெலாட், முன்னாள் பிரதமர் இந்திரா காலத்திலேயே கட்சி மேலிடத்துடன் நெருக்கமாகி விட்டார். கெலாட்டின் தந்தை, 'மேஜிக்' நிபுணர். அதனால், கெலாட்டுக்கும் ஓரளவு மேஜிக் தெரியும். ராஜிவ் வீட்டுக்கு கெலாட் செல்லும்போதெல்லாம், குழந்தைகளாக இருந்த பிரியங்கா, ராகுலுக்கு, மேஜிக் செய்து காட்டுவது வழக்கம் என, கூறப்படுகிறது. இதனால், சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு, கெலாட் மீது பாசம் அதிகம்.

இதன் காரணமாகவே, சச்சின் பைலட்டுக்கு பதிலாக, கெலாட்டுக்கு தொடர்ந்து இவர்கள் ஆதரவு அளித்து வந்ததாக, காங்., மூத்த தலைவர்கள் பலரும் கூறுகின்றனர். சச்சின் பைலட் ஆதரவாளர்களோ, 'எங்க ஆளுக்கு, மேஜிக் தெரியாம தான், அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போய் விட்டதோ...' என, புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X