சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மக்கள் அடங்க மாட்டார்கள்!

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வ.ப.நாராயணன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கேரளாவில், முக கவசம் அணியாவிட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டு சிறை என, தடாலடியாக அறிவித்துள்ள, அம்மாநில முதல்வர், பினராயி விஜயனுக்கு பாராட்டுகள்.மேலும் அம்மாநிலத்தில், பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது; சமூக இடைவெளி கடைப்பிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நம்
 மக்கள் அடங்க மாட்டார்கள்!

வ.ப.நாராயணன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கேரளாவில், முக கவசம் அணியாவிட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டு சிறை என, தடாலடியாக அறிவித்துள்ள, அம்மாநில முதல்வர், பினராயி விஜயனுக்கு பாராட்டுகள்.மேலும் அம்மாநிலத்தில், பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது; சமூக இடைவெளி கடைப்பிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நம் மக்களிடம், 'மயிலே மயிலே...' என கெஞ்சினால், வேலைக்கு ஆகாது; கடும் தண்டனை தான், ஒழுக்கத்தை வளர்க்கும்.'வைரஸ் தொற்று பாதுகாப்பு விதியை, வெறும், 5 சதவீத மக்கள் கடைப்பிடிக்கவில்லை என்றாலும், அவர்களால், மீதியுள்ள, 95 சதவீத மக்களுக்கும் ஆபத்து ஏற்படும். அதனால், இந்த கடும் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை' என, பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்; சரி தானே!

இது போன்ற கடும் நடவடிக்கை எடுத்து, மக்களை பகைத்துக்கொண்டால், ஓட்டு வங்கிக்கு, வேட்டு விழுமே என்றெல்லாம் கவலைப்படாமல், துணிச்சலாக செயல்படும் அவரை, பாராட்டியே ஆக வேண்டும்.தமிழகத்தில், இது போன்ற கடும் நடவடிக்கை எடுக்க, ஆட்சியாளர்கள் தயங்குவர். காரணம், இங்கே ஓட்டு வங்கி தான் பிரதானம். மக்களிடம் கடுமை காட்டினால், அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாதே என்ற எண்ணம், நம் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

'ஹெல்மெட், ஆட்டோ மீட்டர்' உட்பட பல்வேறு விஷயங்களில், அரசு, பெயரளவிற்கு சட்டம் இயற்றி, பின், அதை கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறது. அரசின் உத்தரவுகளை, இங்கே எத்தனை பேர் மதிக்கின்றனர்? அதற்கு காரணம், ஆட்சியாளர்கள் வலிமை மிக்கவராக இல்லாதது தான்.'கொரோனா' விஷயத்தில், தமிழக அரசு மென்மையான போக்கை கடைப்பிடிப்பது, நல்லதல்ல.

விதியை மதிக்காத மக்கள் மீது, நடவடிக்கை எடுக்கத் தயங்கினால், தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்கவே முடியாது.கடுமை இல்லாத ஊரடங்கால், கொரோனாவும் அடங்காது; மக்களும் அடங்க மாட்டார்கள்.

***


சர்மா அபாயக் குரல் கேட்கிறதா?


ரா.கல்யாணசுந்தரம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியா - நேபாளம் நட்பை உடைக்கும் முயற்சியை, பல ஆண்டுகளுக்கு முன்பே, சீனா துவக்கி விட்டது. இதற்காக, மாவோயிஸ்டுகளை, நேபாளத்தில் வளர்த்து விட்டது, சீனா.நேபாள நாட்டை ஆட்சி செய்த, மல்லா அரச பரம்பரையை சேர்ந்த மன்னர் ஒருவர், திடீரென இறந்தார்; நாடே துக்கத்தில் ஆழ்ந்தது. இதனால், காத்மாண்டில் உள்ள, பசுபதிநாதர் கோவிலில் பூஜை செய்ய முடியாமல் போனது.

அப்போது தான், அண்டை நாடான, இந்தியாவிலிருந்து, பூசாரிகளை வரவழைத்து, கோவிலில் பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.பசுபதிநாதர் கோவில், ஐந்தாம் நுாற்றாண்டை சேர்ந்தது. 800 ஆண்டுகளாக, இக்கோவிலில், இந்தியாவை சேர்ந்தவர்களே, தலைமை பூசாரிகளாக இருந்து வருகின்றனர்.கம்யூனிஸ்ட்கள், நேபாளத்தில் ஆட்சி பொறுப்பேற்றதும், கோவில் தலைமை பூசாரியை, பதவி நீக்கம் செய்தனர்.

இது தொடர்பான வழக்கில், 'கோவில் விஷயத்தில், அரசு தலையிடக் கூடாது' என, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், 2009ம் ஆண்டு, 40க்கும் மேற்பட்ட, மாவோயிஸ்ட்கள், கோவிலுக்குள் நுழைந்து, அங்கிருந்த இந்திய வம்சாவளி பூசாரிகள், கிரிஷ் பட் மற்றும் ராகவேந்திர பட் ஆகியோரை தாக்கியுள்ளனர்; அவர்களது உடைகளையும் கிழித்து, நிர்வாணமாக்கி, சித்ரவதை செய்தனர்.

சீனாவின் துாண்டுதலில் தான், மவோயிஸ்டுகள் அப்படி செய்தனர். நேபாளத்தில், அடாவடித்தனமாகக் கட்சியை வளர்த்தனர்.இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளை வளைக்கும் முயற்சியில், சீனா நெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தான், நேபாளத்தையும் கபளீகரம் செய்யத் துவங்கியுள்ளது.

நேபாள பிரதமர், கே.பி.சர்மா ஒலி, இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவது, அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி உள்ளது.திபெத்தை விழுங்கியதைப் போல, நேபாளத்தையும், சீன டிராகன் விழுங்க துவங்கி விட்டது. நேபாளத்தின் அபாயக் குரல், சர்மா ஒலி கேட்கிறதா?

***


ஒழுக்கத்தை,'ஆன்லைன்' கற்றுத் தராது!


வெ.ஜெயலட்சுமி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' நோய் பரவல் காரணமாக, நம் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. 'பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை; இனி, 'ஆன்லைன்' வகுப்பு தான்' என, பீதியை கிளப்புகின்றனர். இது, எந்தளவிற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.மொபைல் போனிலும், மடிக்கணினியிலும் பாடம் படிப்பதால், கழுத்து, முதுகு, கண் போன்ற உடல் உறுப்புகளில் வலி ஏற்பட்டு, குழந்தைகள் வேதனையை அனுபவிப்பர்.

இனி, கொரோனாவுடன் தான், நம் வாழ்க்கை. அந்நோயை, எதிர்ப்பு சக்தியால் வெல்லலாம். பயந்து கொண்டிருந்தால், எதையும் எதிர்க்கொள்ள முடியாது. 'ஆன்லைன்' கற்பித்தலில், மாணவர்களை கண்காணிப்பதும், சந்தேகங்களை உடனுக்குடன் போக்குவதும் சாத்தியமல்ல; மேலும், மாணவர்கள் ஒழுக்கத்தையும், சமூக நடத்தையும் கற்றுக் கொள்ள இயலாது.

பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு முழு கவச உடை, முக கவசம் வழங்க வேண்டும். ஒரு பென்ச்சிற்கு, ஒரு மாணவர் மட்டுமே அமர வேண்டும். மைதானத்தில், காலை மற்றும் மாலை வெயிலில், மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தலாம். பள்ளி வளாகம் மற்றும் வகுப்புகளில் கிருமி நாசினி தெளித்து, சுத்தம், சுகாதாரத்தை பேண வேண்டும்.

தினமும் அரை மணி நேரம், யோகா பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி தரும் கல்வியையும், ஒழுக்கத்தையும், 'ஆன்லைன்' கற்றுத் தராது என்பதை உணர்ந்து, தமிழகத்தில் விரைவில், பள்ளிக் கூடங்களை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.lll

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-ஜூலை-202014:27:53 IST Report Abuse
Dr. Suriya பள்ளிகளில் ஷிப்ட் முறை கொண்டு வரலாம்....
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
24-ஜூலை-202007:27:45 IST Report Abuse
veeramani தமிழக ஆட்சியாளர்கள் மக்களின் உணர்விற்கு மதிப்பளித்து நடப்பவர்கள்.தற்போது முகக்கவசம் இல்லாமல் எவரும் நடமாடுவதில்லை . கேரளாவை பார் என்று சொல்கிறீர்கள். கேரளாவின் பழங்குடிமக்களை , காட்டில் வசிப்பவர்களை எவரும் நேசித்ததாக செய்தி இல்லையே. தமிழக மக்கள் தற்போது உணர்ந்து முகக்கவசத்துடம் தான் நடமாடுகிறார்கள். தமிழ்நாடுதான் மிக அதிகமாக டெஸ்ட் செய்து, குணமடையுடலும் எழுபது சதவீதம் உள்ளனர். இதற்கெல்லாம் கரணம், ஆளும் அதிமுக அரசும், மாண்புமிகு முதல்வர் மற்றும் மந்திரிகளும் ஆவார்கள்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஜூலை-202006:15:56 IST Report Abuse
D.Ambujavalli தமிழகத்தில் எல்லாம் ‘மக்கள் ஒத்துழைக்கவில்லை’ என்ற பல்லவி தான் பாடுவார்கள். எங்கே, வி ஐ பிக்கள் இ பாஸ் இல்லாமல் போகிறார்கள், மூச்சு விடவில்லை அதிகாரமெல்லாம் வண்டி வியாபாரி, சைக்கிள் டீ வியாபாரியிடம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X