பொது செய்தி

இந்தியா

வங்கதேச துறைமுகம் வழியாக திரிபுராவுக்கு வந்த, 'கன்டெய்னர்'

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து, வங்கதேச துறைமுகம் வழியாக இயக்கப்பட்ட முதல் சரக்கு கப்பல் போக்குவரத்தின், 'கன்டெய்னர்' திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு நேற்று வந்தடைந்தது.

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து, வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கு, 1,200 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களுக்கு தேவையான பொருட்களை, நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து எடுத்துச் செல்வது, மிகவும் சிரமமாக உள்ளது.அதே நேரத்தில், அண்டை நாடான வங்கதேசத்தின் உதவியுடன், அந்த நாட்டின் சிட்டகாங் துறைமுகம் வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தை துவக்கினால், எளிதாக பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதன்படி, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா துறைமுகத்திலிருந்து, வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகம் வரை, சரக்கு கப்பல் இயக்கப்படும்.

பின் அங்கிருந்து, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு சாலை வழியாக கன்டெய்னரை எடுத்துச் செல்ல முடியும். சிட்டகாங் - அகர்தலா இடையேயான சாலை துாரம், 200 கி.மீ., மட்டுமே. இந்த திட்டத்தை செயல்படுத்தினால், வங்கதேசத்துக்கும், நமக்கும் இடையேயான வர்த்தக உறவு மேம்படும் என்றும் கூறப்பட்டது.இதையடுத்து, கோல்கட்டாவிலிருந்து, சிட்டகாங் துறைமுகம் வழியாக, திரிபுராவுக்கான முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து, சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

இந்தக் கப்பல், சிட்டகாங் துறைமுகத்தை வந்தடைந்தது. பின், அதிலிருந்த கன்டெய்னர்கள் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த கன்டெய்னர்கள், நேற்று அகர்தலாவை வந்தடைந்தன. இதில், வட கிழக்கு மாநிலங்களுக்கு தேவையான ஏராளமான பொருட்கள் ஏற்றி வரப்பட்டு உள்ளன.இது குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியா - வங்கதேசம் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதில், இந்த போக்குவரத்து, ஒரு மைல் கல்லாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RUPA - KOLKATA,இந்தியா
24-ஜூலை-202008:39:06 IST Report Abuse
RUPA ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X