சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

நடிகர் ரஜினிகாந்த்: கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதுாறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்தோர் மீது, துரிதமாக நடவடிக்கை எடுத்து, அந்த, 'வீடியோ'க்களை நீக்கியதற்காக, தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது, மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா!

'டவுட்' தனபாலு: கந்தசஷ்டி கவசம் என்ற பாடலை நிந்தித்தவருக்கு எதிராக, உங்களை போன்ற ஹிந்துக்கள் கொதித்து எழுந்துள்ளீர்கள். ஆனால், காலம் காலமாக, ஹிந்து மதத்தை அவதுாறு செய்து பிழைப்பு நடத்தி வரும், தி.க., அதன் கூட்டணி கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, அடுத்ததாக கோருவீர்களோ என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு வந்துள்ளது; செய்வீர்கள் தானே!
தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜு: திரையரங்குகளை திறக்க தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை. வெளிநாடுகளில் திரையரங்குகளில் ஒரு வரிசையில், இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கின்றனர். அதை இங்கு நடைமுறைப்படுத்தினால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது; நஷ்டம் ஏற்படும். எனவே, திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார்.

'டவுட்' தனபாலு: வெளிநாடுகளில் சினிமா தியேட்டர்களில் ஏராளமான வசதிகளை செய்து கொடுத்து, கட்டணத்தை அதிகமாக வசூலிப்பர். ஆனால், நம்ம ஊரில், சில குறிப்பிட்ட நடிகர்களின் படங்களுக்கு மட்டும், கன்னாபின்னாவென டிக்கெட் கட்டணம் உயரும். எனவே, தமிழகத்தில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்கள் திறப்பில்லை என்பது, பலருக்கு, 'டவுட்'டே இல்லாமல் நல்ல செய்தி தான்!
தமிழக காங்., தலைவர் அழகிரி: இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தகுதிச் சுற்றுகளில் தேர்ச்சி பெற்றவர்களில், பணியில் அமர்த்தப்பட்டோர் தவிர்த்து, மீதமுள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை, காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இந்த கொரோனா நேரத்தில், புதிதாக தேர்வு நடத்துவது கடினம். எனவே, முன்னர் தேர்வான அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மட்டும் நடத்தி, பணியில் சேர்த்து விடலாம்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது, நல்ல முறை தான். இப்படித் தான் சமீபத்தில், செவிலியர்கள், மருத்துவர்கள் சிலரை, தமிழக அரசு தற்காலிக பணிக்கு தேர்ந்தெடுத்தது. உடனே, உங்கள் கூட்டாளி கட்சிகள், 'ஊழல் நடந்து விட்டது' என, கூக்குரல் எழுப்பின. எனவே, உங்கள் கோரிக்கையும், அவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகலாமோ என்ற, 'டவுட்' கிளம்புகிறதே!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
24-ஜூலை-202008:23:21 IST Report Abuse
Aaaaa அந்த சில குறிப்பிட்ட நடிகர்கள் பெயரை சொல்வதில் உங்களுக்கு ஏன் தயக்கம்?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஜூலை-202005:56:07 IST Report Abuse
D.Ambujavalli ஊரெல்லாம் கவச அவதூறு பற்றி விமர்சித்து ஓய்ந்தபின் ஒப்புக்கு ஒரு அரோஹரா போட்டதால் மட்டும் ஹிந்து மதக்காவலர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X