ஊரடங்கு நீட்டிப்பு ஓணத்துக்கு, கிட்!| Dinamalar

ஊரடங்கு நீட்டிப்பு ஓணத்துக்கு, 'கிட்!'

Added : ஜூலை 23, 2020
Share

திருவனந்தபுரம் : ''கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், கேரளாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படும். ஓணத்துக்கு அரசு சார்பில், அனைத்து குடும்பத்துக்கும், 11 பொருட்கள் அடங்கிய இலவச, 'கிட்' வழங்கப்படும்,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து, ஒரே நாளில் 1,000த்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு, 15 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்படியே பாதிப்பு அதிகரித்தால், முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டி வரும். இது பற்றி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X