பொது செய்தி

தமிழ்நாடு

கவர்னர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : தமிழக கவர்னர் மாளிகையில், 84 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழக கவர்னர் மாளிகையில், சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை தொடர்ந்து, 147 பேருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 84 பேருக்கு, நோய் தொற்று உறுதியானது. இவர்கள், கவர்னர் மாளிகை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய ஊழியர்கள். நோய் தொற்று உறுதியானவர்கள், சுகாதார துறையால் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். 'இவர்கள் அனைவரும், கவர்னர் மாளிகையின் நுழைவுவாயில் பணியில் இருந்தவர்கள். இவர்களில் யாருக்கும், கவர்னர் உடனோ, கவர்னர் மாளிகை, மூத்த அலுவலர்களுடனோ தொடர்பு கிடையாது.

'எனினும், கவர்னர் மாளிகை முழுதும், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையை, கூர்ந்து கண்காணித்து வருகிறோம்' என, கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202004:56:03 IST Report Abuse
Girija இவ்வளவு பணியாட்கள் அவசியமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X