சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய கட்சிகள்!

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய கட்சிகள்!

''பலரும் லீவுல ஓடிப் போயிட்டாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்தத் துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மாநில நெடுஞ்சாலைத் துறையின் மதுரை கோட்டத்துல, சில பொறியாளர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது... சென்னைக்கு போயிட்டு வந்த சில பொறியாளர்கள் மூலம் தான், மற்றவங்களுக்கும் பரவுச்சு பா...

''தங்களுக்கும் தொற்று பரவிடுமோன்னு, பல பொறியாளர்கள், 'மெடிக்கல் லீவ்' போட்டு, வீடுகளுக்குள்ளயே முடங்கிட்டாங்க... இதனால, நெடுஞ்சாலைத் துறையில, பல சாலை பணிகள், கிடப்புல கிடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''யார் யார் வேலைக்கு வராங்கன்னு இன்னும் அறிக்கை தரலைங்க...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்துல, தேவையை விட அதிக ஊழியர்கள் பணியில இருக்காங்க... அதே சமயம், பிரிவு அலுவலகங்கள்ல, அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுறதால, அங்க இருக்கிறவங்களுக்கு கடும் பணிப்பளு ஏற்படுதுங்க...

''இதனால, தலைமை அலுவலகத்துல, ஈ ஓட்டிட்டு இருக்கிறவங்களை கணக்கெடுத்து, பிரிவு அலுவலகங்கள்ல நியமிக்க முடிவு செஞ்சாங்க... இதுக்காக, யார் யார், என்ன வேலை பார்க்கிறாங்கன்னு கணக்கெடுக்க, மொத்தம், 13 குழுக்களை, மே, 5ம் தேதி அரசு நியமிச்சதுங்க.. ஒவ்வொரு குழுவிலும், இரண்டு- மூணு அதிகாரிகள் இருக்காங்க...

''இவங்க, ஜூன், 30க்குள்ள அறிக்கை தரணும்னும், 'கெடு' விதிச்சிருந்தாங்க... ஆனா, ஊரடங்கை காரணம் காட்டி, இதுவரை யாரும் அறிக்கை தரலைங்க... அதிகாரிகள் அறிக்கை குடுத்துட்டா, தேவையில்லாத பதவிகள்ல பெஞ்ச் தேய்ச்சிட்டு இருக்கிறவங்களை கண்டுபிடிச்சு, பிரிவு அலுவலகங்களுக்கு மாற்ற, அரசு முடிவு செஞ்சிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கூட்டமெல்லாம் நடத்தப்படாதுன்னு சொன்னா யார் கேக்கறா...'' என அலுத்தபடியே, நாளிதழை மடித்தார் குப்பண்ணா.

''ஊரடங்கை மீறி, யாருவே கூட்டம் நடத்துனா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு, பெரம்பலுார் மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் கலந்துரையாடல் கூட்டம், சமீபத்துல, துறைமங்கலத்துல தனியார் அரங்கத்துல நடந்தது... 200 பேர் மட்டுமே உட்கார முடியற இந்த அரங்கத்துல, 700 பேர் வரை கலந்துண்டா ஓய்...

''அதே மாதிரி, அ.ம.மு.க., கட்சி சார்புல, பெரம்பலுார், வேப்பந்தட்டை ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், துறைமங்கலத்துல இருக்கற கட்சி அலுவலகத்துல நடந்துது... இங்கேயும், 150க்கும் மேற்பட்டவா, சமூக இடைவெளியே இல்லாம கலந்துண்டா ஓய்...

''ஊரடங்கு அமல்ல இருக்கறதால, அனுமதி கேட்டாலும், போலீசார் தர மாட்டாளே... அதனால, போலீசாரிடம் விண்ணப்பிக்காமலேயே கூட்டத்தை நடத்திட்டா... இது, போலீசுக்கு தெரிஞ்சும், கண்டும் காணாம இருந்துட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''சுய கட்டுப்பாடு இல்லேன்னா, கொரோனாவை இந்த ஜென்மத்துல ஒழிக்க முடியாது வே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RUPA - KOLKATA,இந்தியா
24-ஜூலை-202008:54:21 IST Report Abuse
RUPA சுய ஒழுங்கு எல்லாருக்கும் வேண்டும் , இல்ல வைரஸ் சங்கு ஓதி விடும்
Rate this:
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
24-ஜூலை-202008:19:26 IST Report Abuse
Aaaaa பொதுமக்கள் கூடவில்லையே இவர்கள் கூடினால் இவர்களுக்குதானே கொரோனா பாதிப்பு
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஜூலை-202006:09:17 IST Report Abuse
D.Ambujavalli ஊருக்கு உபதேசம் செய்யும் முதல்வர் முதலில் தனது கட்சி ஒழுங்காக உள்ளதா என்று பார்க்க மாட்டார் போலீஸ் கையில் இருப்பதால், எல்லா விதி மீறல்களையும் செய்து தொற்று எண்ணிக்கையை ஏற்றுவார்கள், பழியை, கோயம்பேடு, மீன் மார்க்கெட் என்று திசை திருப்புவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X