பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகளின் வாசலில் விழிப்புணர்வு பேனர்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 வங்கிகளின் வாசலில்  விழிப்புணர்வு பேனர்

சென்னை : வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, வங்கிகளுக்கு முன், 'பேனர்'கள் வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பேனர் வைக்க, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.வங்கிகள், அத்தியாவசிய சேவை வழங்கி வருகின்றன. வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாயிலாக, கொரோனா பரவும் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இருந்தாலும், 'முக கவசம் இல்லாமல் வந்தால், அனுமதி இல்லை; தனிமனித இடைவெளியை பின்பற்றுங்கள்.'வங்கிக்குள் நுழையும் முன், கிருமி நாசினி திரவத்தை பயன்படுத்துங்கள்' என, வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளுமாறு, பேனர் வைக்க, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி, பல்வேறு வங்கிகள் முன், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X