புவனகிரி; புவனகிரி தாலுகா கிருஷ்ணாபுரத்தில் இயங்கும் மேற்படுத்தப்பட்ட சுகாதர நிலையத்தில், பழுதடைந்த ஆம்புலன்ஸ்களை, மாற்றி தரமான வாகனம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புவனகிரி தாலுகா, மருதுார் அருகே கிருஷ்ணாபுரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு புவனகிரி ஒன்றியம் மற்றும் சேத்தியாத்தோப்பு குறு வட்டத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.வட்டாரத்தின் தலைமை இடமான இங்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகளை மேல் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வழங்கிய ஆம்புலன்ஸ்கள் பழுதாகி, பயன்படுத்த முடியாமல் ஓரம் கட்டப்பட்டன. மேல் சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து செல்ல முடியவில்லை.அவசரத்திற்கு வடலுார் அல்லதுகுறிஞ்சிப்பாடியில் இருந்து வாடகை கார் பிடித்து வந்து நோயாளிகளை அழைத்து செல்லும் அவலம் நீடிக்கிறது. மேலும் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைக்கு போன் செய்தால், சாலை வசதி சரியில்லாததால் வருவதில்லை, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து காட்சிப்பொருளாக உள்ள இரு ஆம்புலன்ஸ் வேன்களை மாற்றி புதிய வேன்களை வழங்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE