கடலுார்; கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், உயர் மின் கோபுரத்தின் ஒரு பகுதி விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதிகள் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், கட்சி கூட்டங்கள், மாநாடுகள், சர்க்கஸ், பொருட் காட்சிகள் நடத்தப்படும். நகர மக்கள் மாலை நேரத்தில், மைதானத்திற்கு வந்து ஓய்வு எடுத்துச் செல்வர்.கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் மைதானத்தில் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. தற்போது மைதானத்தின் நடுவில் உள்ள உயர்மின் கோபுரத்தின் ஒரு பகுதி விளக்குகள் எரியவில்லை. இரவில் மைதானத்தின் ஒரு பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.தற்போது மே 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, பார்கள் மூடியுள்ளதால் மது பாட்டில்களை வாங்கி வரும் குடிமகன்கள், மைதானத்தின் இருள் சூழ்ந்த பகுதியில்அமர்ந்து குடிக்கின்றனர். காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து வீசிச் செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் காயமடைகின்றனர்.மைதானத்தில் பழுதடைந்த உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும். அங்கு அமர்ந்து குடிப்பதை தடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE