பொது செய்தி

தமிழ்நாடு

மான் வேட்டை: வனத் துறை குறட்டை

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : திருப்போரூர், செங்கல்பட்டு வனப் பகுதிகளில் நடக்கும், மான் வேட்டையை தடுப்பதில், வனத் துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

சென்னையை அடுத்த திருப்போரூரில், நில தகராறில் துப்பாக்கி சூடு நடத்தியதாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.இவர்களின் துப்பாக்கி பயன்பாடு குறித்த விசாரணையில், மான், முயல் வேட்டை குறித்த சில தகவல்கள், காவல் துறைக்கு தெரியவந்துள்ளது.இதையடுத்து, வனவிலங்கு வேட்டை குறித்த, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு வன கோட்டத்தில், திருக்கழுக்குன்றம், பாலுார், நெமிலி, வல்லம் உள்ளிட்ட வனப் பகுதிகள் வருகின்றன.

திருப்போரூர் கோட்டத்தில், காடூர், இல்லலுார், மதையூர், தையூர், கொளத்துார் ஆகிய வனப் பகுதிகள் உள்ளன. இங்கு புள்ளி மான்கள், அரிய வகை வெளி மான்கள், 45 குழுக்களாக வாழ்கின்றன. இது, 2016 கணக்கெடுப்பில் தெரியவந்தது.ஆனால், இப்பகுதிகளில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும், அரசியல் பிரமுகர்கள், மான், முயல், மயில் வேட்டையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும், வனத் துறை கள பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால், அரசியல் பிரமுகர்கள் வேட்டையை, அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

தற்போது, துப்பாக்கிச் சூடு விவகாரத்தை வைத்து, இப்பகுதியில் வன விலக்கு கணக்கெடுப்பு நடத்தினால், உண்மை நிலவரம் தெரிய வரும்.இது விஷயத்தில், வனத் துறை அதிகாரிகள் மவுனத்தை கலைத்து, கள ஆய்வில் இறங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202007:37:58 IST Report Abuse
Bhaskaran அவர்களே இங்கு அரியவகை மான் இருக்கிறது என்று இடத்தை குறித்து கொடுப்பார்கள் .கையில் பணமும் நாளை கழகம் ஆட்சிக்குவந்தால் விசுவாசத்தை மெச்சி சீனியாரிட்டி மீறி பதவி உயர்வு கிடைக்கும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202004:59:12 IST Report Abuse
Girija நாங்க தூங்குற மாதிரி நடிப்போம் யானை கூட்டம் இவர்களை தாலாட்டுகிற மாதிரி சமயம் பார்த்து மிதிக்கும் . மிருகங்களின் பாதுகாப்பு நீதிபதி யானைகள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X