பொது செய்தி

இந்தியா

'மாஸ்க்' போடாதவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
ராஞ்சி : ஜார்க்கண்டில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமை யிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை, 6,400ஐ கடந்துள்ளது. பலி

ராஞ்சி : ஜார்க்கண்டில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமை யிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை, 6,400ஐ கடந்துள்ளது. பலி எண்ணிக்கை, 64 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தில், ஜார்க்கண்ட் தொற்றுநோய் அவசர சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும், முகக் கவசம் அணியாமல் வெளியே செல்வோருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும். இந்த சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டு, முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று கூறுகையில்,“நேரத்திற்கு ஏற்ப, தேவைப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். “அதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஆகையால், இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்,” என்றார். இதுகுறித்து, மாநில அமைச்சரவை செயலர் அஜய் குமார் கூறியதாவது:ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாமல், மக்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை காண முடிகிறது. எனினும், அவர்களை தண்டிக்க சட்டத்தில் இடமில்லாமல் இருந்தது. ஆகையால், இந்த அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X