நெல் கொள்முதல் நிலையம் கூடுதலாக திறக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையம் கூடுதலாக திறக்க கோரிக்கை

Added : ஜூலை 23, 2020
Share
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் மாவட்ட செயலர் மாதவன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:கடலுார் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகிறது. எனவே தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். இல்லையெனில், குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை கொள்முதல்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் மாவட்ட செயலர் மாதவன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:கடலுார் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகிறது. எனவே தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். இல்லையெனில், குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்யும் நிலை ஏற்படும்.தற்போது, மாவட்டத்தில், 15 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், விடுபட்டுள்ள சி.என்.பாளையம், கீரப்பாளையம், பூதங்குடி, குமராட்சி, அம்மாபேட்டை, விருத்தாசலம், வயலுார், திட்டக்குடி, தாழநல்லுார் உள்ளிட்ட இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X