ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் சிறப்பு பட்ட கரும்பு அறவை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் சிறப்பு பட்ட கரும்பு அறவை துவக்கம்

Added : ஜூலை 23, 2020
Share
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் சிறப்பு பட்ட கரும்பு அறவை துவக்கவிழா நடந்தது.ஆலையின் முதுநிலை இணை உப தலைவர் ராமசுப்ரமணியன், இணை உபதலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் அறவையை துவக்கி வைத்தனர். கொரோனா தொற்று காரணமாக, விவசாயிகள் இல்லாமல் முதல் முறையாக அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டு அறவையை துவக்கி வைத்தனர்.இணை உபதலைவர் சங்கரலிங்கம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் சிறப்பு பட்ட கரும்பு அறவை துவக்கவிழா நடந்தது.ஆலையின் முதுநிலை இணை உப தலைவர் ராமசுப்ரமணியன், இணை உபதலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் அறவையை துவக்கி வைத்தனர். கொரோனா தொற்று காரணமாக, விவசாயிகள் இல்லாமல் முதல் முறையாக அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டு அறவையை துவக்கி வைத்தனர்.இணை உபதலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது:இந்த பட்டத்தில் 4 லட்சம் டன் கரும்பு அறவை செய்ய திட்டமிட்டுள்ளோம். கரும்புக்கு மட்டுமே நிலையான விலை கிடைக்கிறது. கரும்பு அறுவடை முடிந்த 15 நாட்களுக்குள் ஒரே தவணையில் பணம் வழங்குகிறோம். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிட வேண்டும். அகலகால் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களை பயன்படுத்த முடிவதோடு அதிக மகசூல் கிடைக்கும். வாய்ப்புகளை பயன்படுத்தி அதிகளவு கரும்புகளை விவசாயிகள் பயிரிட்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X