எல்லையில் அமைதி சீனாவிடம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எல்லையில் அமைதி சீனாவிடம் வலியுறுத்தல்

Added : ஜூலை 23, 2020
Share
புதுடில்லி : 'எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில், தொடர்ந்து அமைதி நிலவுவது, இரு தரப்பு உறவுகளின் அடிப்படைகொள்கை' என, சீனாவிடம் இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது. டில்லியில், வெளியுறவு செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றத்தை குறைக்க, சீனாவுடன், ராணுவ கமாண்டர்கள் அளவிலும், துாதரக அளவிலும், பேசப்பட்டு

புதுடில்லி : 'எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில், தொடர்ந்து அமைதி நிலவுவது, இரு தரப்பு உறவுகளின் அடிப்படைகொள்கை' என, சீனாவிடம் இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது.

டில்லியில், வெளியுறவு செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றத்தை குறைக்க, சீனாவுடன், ராணுவ கமாண்டர்கள் அளவிலும், துாதரக அளவிலும், பேசப்பட்டு வருகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், சீனா வெளியுறவு அமைச்சர், வாங் யீ உடன், கடந்த, 5ம் தேதி பேசினார். இதன்பின், லடாக் எல்லையிருந்து, சீனா, படைகளை வாபஸ் பெற துவங்கியது.

சீனாவுடன் நடத்தி வரும் பேச்சில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், தொடர்ந்து அமைதி நிலவுவது தான், இருதரப்பு கொள்கைகளின் அடிப்படையாக இருக்க வேண்டும் என, இந்திய தரப்பில், சீனாவிடம் வலிமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எல்லையில், இருதரப்பும், ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறுவது பற்றியும் பேசப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X