வீடு தேடிச் சென்று பரிசோதனை விருத்தாசலத்தில் பணிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடிச் சென்று பரிசோதனை விருத்தாசலத்தில் பணிகள் தீவிரம்

Added : ஜூலை 23, 2020
Share

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் வீடுதேடி சென்று பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக துவங்கியுள்ளது.விருத்தாசலம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சப் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி பள்ளிகள், தனியார் திருமண மண்டபங்கள், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட 12 இடங்களிலும், மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 3 மையங்கள், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களில் தலா இரண்டு மையங்கள் என 19 மையங்களில் சிறப்பு பரிசோதனை செய்யப்படுகிறது.மேலும், விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் முழு கவச உடையணிந்த மருத்துவக் குழுவினர், வீடுகளுக்குச் சென்று, காய்ச்சல், இருமல், தொண்டை எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு பரிசோதனை செய்யும் பணி துவங்கியது. அதில், உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் சதவீதம் குறித்து கணக்கிட்டு, ஏதேனும் அறிகுறி உள்ள நபர்கள் மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X