அப்பல்லோவில் திருமலை ஜீயர் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அப்பல்லோவில் திருமலை ஜீயர்

Added : ஜூலை 23, 2020
Share

திருப்பதி : திருமலை மடத்தின் பெரிய ஜீயரான சடகோப ராமானுஜர், 70, கொரோனா தொற்று சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஏழுமலையான் கைங்கரியங்களை நேரடியாக கண்காணித்து வரும், திருமலை மடத்தின், பெரிய ஜீயர் சடகோப ராமானுஜருக்கு, ஐந்து நாட்களுக்கு முன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சாதுர்மாஸ்ய தீட்சை அனுசரித்து வருவதால், அதற்கு பங்கம் ஏற்படாமல், திருப்பதியில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வந்தார்.தற்போது, அவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது. எனினும், அவரின் சுவாச உறுப்புகளை பரிசோதித்து, உயர்தர சிகிச்சை அளிக்க, தேவஸ்தானம் அவரை, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு அனுமதித்தது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X