பொது செய்தி

இந்தியா

'ஹேமர்' ஏவுகணை வாங்க மத்திய அரசு உத்தரவு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்திய விமானப் படைக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக, பிரான்சிடமிருந்து, அதிநவீன, 'ஹேமர்' ஏவுகணைகளை வாங்குவதற்கு மத்திய அரசு அவசர, 'ஆர்டர்' கொடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து, அதிநவீன, 'ரபேல்' போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் கட்டமாக, ஐந்து ரபேல் போர் விமானங்கள், அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்கு வரவுள்ளன.இந்நிலையில், இந்திய விமானப் படைக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக, பிரான்சிடம்இருந்து, அதிநவீன, 'ஹேமர்' ஏவுகணைகளை வாங்குவதற்கு, மத்திய அரசு தரப்பில், அவசரமாக, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏவுகணைகளால், விமானங்களில் இருந்து, பூமியில், 60 - 70 கி.மீ., வரம்பிற்குள் உள்ள இலக்கை துல்லியமாக தாக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X