பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்யவேளாண்துறை அழைப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுச்சத்திரம்; குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென, பரங்கிப்பேட்டை வேளாண்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், இயற்கை இடப்பாடுகளை கருத்தில்கொண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீடு செய்ய வேண்டும். இதில் தற்போது குறுவை சாகுபடிக்கு காப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூ. 31 ஆயிரத்து 300 ஆகும்.இரண்டு சதவீத தொகையை ஏக்கருக்கு ரூ.626 பிரிமியமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். பிரிமியம் செலுத்த வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். ஆதார் கார்டு, சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள பொதுசேவை மையத்தில் காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X