பொது செய்தி

தமிழ்நாடு

ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.592 உயர்வு

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 592 ரூபாய் அதிகரித்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, மற்ற முதலீட்டு திட்டங்களை விட, மதிப்புமிகு உலோகமான தங்கம், வெள்ளியில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், எப்போதும் இல்லாத வகையில், அவற்றின் விலை தொடர்ந்து, அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் முதல் முறையாக, நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், சவரன், 38 ஆயிரம் ரூபாயை தாண்டியது. அன்று, கிராம் தங்கம், 4,773 ரூபாய்க்கும்; சவரன், 38 ஆயிரத்து, 184 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 63.90 ரூபாயாக இருந்தது. நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு, 74 ரூபாய் அதிகரித்து, 4,847 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு அதிரடியாக, 592 ரூபாய் உயர்ந்து, 38 ஆயிரத்து, 776 ரூபாயானது.

வெள்ளி விலையும், கிராமுக்கு, 3.50 ரூபாய் உயர்ந்து, 67.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மார்ச், 23ல், கிராம் தங்கம், 3,952 ரூபாய்; சவரன், 31 ஆயிரத்து, 616 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 40.50 ரூபாயாக இருந்தது. அம்மாதம், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு, 24ல் வெளியிடப்பட்டது.இதையடுத்து, மார்ச், 23ல் இருந்து, 122 நாட்களில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 895 ரூபாயும்; சவரனுக்கு, 7,160 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் வெள்ளி விலை, கிராமுக்கு, 26.90 ரூபாய் உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
24-ஜூலை-202012:02:03 IST Report Abuse
Gopinathan S ஒரு பக்கம் தங்கம் விலை அசுர வேகத்தில் ஏற்றம்..இன்னொரு பக்கம் புற்றீசல் போல முளைத்து வரும் "அட்டிகா" போன்ற தங்க நகை மீட்கும் நிறுவனங்கள்.. தனி ஒருவன் படத்தில் நாயகன் சொல்வது போல இவ்விரு விஷயங்களுக்கும் நிச்சயம் ஒரு தொடர்பு உள்ளது... சாமானிய மக்களிடம் உள்ள சொற்ப தங்கத்தை ஆசை வார்த்தை கூறி வாங்கி கொள்ளும் நிறுவங்கள்...சிந்திக்க வேண்டிய விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X