அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளிபிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளிபிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

Added : ஜூலை 23, 2020
Share

மந்தாரக்குப்பம்; குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு பொது தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவர்கள் சுஜீத், திணேஷ்குமார், ஜெயகாந்தன் அதிக மதிப்பெண் பெற்றனர். வணிகவியலில் மாணவர் பாலாஜி, பொருளியலில் திணேஷ்குமார், கணக்கு பதிவியலில் சுஜீத், கம்ப்யூட்டர் பயன்பாடு பாடத்தில் ஜெயகாந்தன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் மோனிகா, பிரியதர்ஷனி, சைபுல்லா ஆகியோர் 100 மதிப்பெண் பெற்றனர்.சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், செயலர் சட்டநாதன், கல்வி ஆலோசகர் கார்த்திகேயன், முதல்வர் பெலிக்ஸ் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X