சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆறுகளில் மணல் கடத்தல் அதிகரிப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சென்னை : ஊரடங்கு தளர்விற்கு பின், தமிழகம் முழுதும் கட்டுமான பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல பணிகள் நடக்கின்றன. இப்பணிகளுக்கு மணல் அதிகம் தேவை.வேலுார், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஆறு இடங்களில், மணல் குவாரிகளை பொதுப்பணித்துறை இயக்கி வருகிறது. இங்கு குறைந்த அளவிலேயே, மணல் வழங்கப்படுகிறது.அதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆறுகளில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இவ்வாறு திருடப்படும் மணல், பல இடங்களில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

மணல் திருட்டை கண்காணிக்கவும், குவாரிகளில் மணல் விற்பனையை முறைப்படுத்தி, அரசுக்கு அதிக வருவாய் பெற்றுத் தரவும், பொதுப்பணித்துறையில், குவாரிகள் கண்காணிப்பு பிரிவு துவங்கப்பட்டு உள்ளது. இதற்கு திட்ட இயக்குனர், கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை அரசு நியமித்து, பல லட்சம் ரூபாயை சம்பளமாக வழங்கி வருகிறது. இவர்களுக்கான அலுவலகம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ளது. ஆனாலும், குவாரிகள் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், மணல் கடத்தலை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

இதனால், போலீசார், வருவாய் துறையினரின் அமோக ஆதரவுடன், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகள், மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் விற்பனை வாயிலாக, அரசுக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான வருவாய், உள்ளூர் அரசியல்வாதிகள், சமூகவிரோதிகளின் கைகளில் சென்று சேருகிறது. ஊரடங்கு உத்தரவால், அரசிற்கு வருவாய் குறைந்துள்ளது. மணல் கடத்தலை தடுத்து, விற்பனையை அதிகரித்தால், அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இப்பிரச்னையில், அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X