சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20 பேருக்கு தொற்று வதந்தி வேப்பூர் அருகே பரபரப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

வேப்பூர்; வேப்பூர் அருகே 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் பரபரப்பு நிலவியது.வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் தகவல் பரவியது. சப் கலெக்டர் பிரவீன் குமார் உத்தரவின் படி, திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் வலைதளத்தில் பதிவிட்ட நபரிடம் விசாரித்தார்.அரியநாச்சி கிராமத்தில் தொற்று பாதித்தவர்கள் உள்ளதாக, சிலர் கூறியதால் சமூக வலை தளங்களில் பதிவிட்டதாக அவர் கூறினார். மங்களூர் வட்டார மருத்துவர்கள் குழு, கிராமத்தினரிடம் பரிசோதனை செய்ததில், யாருக்கும் தொற்று அறிகுறிகள் இல்லை என தெரிந்தது.தாசில்தார் செந்தில்வேல் கூறுகையில், மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய் ததில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலுக்கு கழுதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா குறித்து தவறான தகவல்களை சமூக வலை தளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X